திமுக துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி கருணாநிதியின் ட்விட்டர் கணக்கிற்கு கிரே நிற குறியீட்டை வழங்கியுள்ளது. தமிழ் நாட்டில் அரசு/ பன்னாட்டு அரசின் நிறவனக் குறிப்பெற்றுள்ள முதல் அரசியல் தலைவராக கனிமொழி கருணாநதி பதிவாகியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதற்கு பின் எலான் மஸ்க் பல அதிரடி நடவெடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ட்விட்டரில் பயனாளர்களின் ப்ளூ டிக் எனப்படும் நில நிற குறியீட்டை மாதந்தோறும் சந்தா செலுத்தினால் மட்டுமே பெற முடியும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்தது.
ப்ளூ டிக் என்பது பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், 1 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் கொண்டவர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் நில நிற குறியீட்டை கொடுக்கும். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதற்கு பின் இந்த ப்ளூ டிக்கை பெற மாதந்தோரும் சாந்த செலுத்தவேண்டும், எல்லோரும் சமமாக நடத்தப்படுவார்கள் என கூறியிருந்தார்.
இந்த கட்டணமானது இந்திய மதிப்பில் ரூ.600 முதல் ரூ. 900 வரை மாதக் கட்டணமாக நிர்ணியக்கப்பட்டது. ப்ளூ டிக்கை பெற ஏப்ரல் 1ஆம் தேதி கடைசி நாள் என்று ட்விட்டர் நிறுவனம் கால அவகாசம் வைத்தது. பின்னர் இதன் கால அவகாசம் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி சந்தா செலுத்தாது பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவர்க்கும் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. ப்ளூ டிக் நீக்கப்பட்ட செய்தி இணையத்தில் செம வைரலாகி வந்தன. இதற்கிடையே பிரபலங்களுக்கு நீக்கப்பட்ட இந்த ப்ளூ டிக் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சந்தா செலுத்தினார்களா என்பது தெரியவில்லை. ஆனால், சந்தா செலுத்தாமலேயே ப்ளூ டிக் திரும்ப கிடைத்துள்ளது என பல பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது ட்விட்டர் நிறுவனம் நீலம் நிறம் நிரூபிக்கப்பட்ட நபர்களுக்கும், சாம்பல் ( கிரே) நிறம் அரசு அல்லது பன்னாட்டு தலைவர்கள் அல்லது அரசுகளின் கணக்குகளுக்கும், தங்க நிறம் தனியார்/ பொது நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசு/ பன்னாட்டு அரசின் நிறவனக் குறிப்பெற்றுள்ள முதல் அரசியல் தலைவராக கனிமொழி கருணாநதி பதிவாகியுள்ளார்.