நாய் படமாக மாறிய ட்விட்டர் Blue Bird லோகோ...

நாய் படமாக மாறிய ட்விட்டர் Blue Bird லோகோ...
Published on

டெஸ்லா நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து பல அதிரடி மாற்றங்களை செய்துவருகிறார். இந்நிலையில், தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் லோகோ, நாய் படமாக மாறியுள்ளதையடுத்து, டோஜ்காயின் கிரிப்டோகரன்சி மதிப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலக பணக்காரர்களில் 2வது இடத்தை வகிப்பவரும், டெஸ்லா நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து, அவர் பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கையாண்டு வருகிறார்.

அதோடு, கடந்த சில ஆண்டுகளாக, டோஜ்காயின் கிரிப்டோகரன்சி குறித்த பதிவுகளை அவ்வப்போது, ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து, கிரிப்டோகரன்சி மதிப்பு பெருமளவில் உயர்ந்ததால், எலான் மஸ்க்குக்கு எதிராக, 21 லட்சம் கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் எலான் மஸ்க் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், எலான் மஸ்க், தற்போது தனது ட்விட்டர் நிறுவன பிரபலமான Blue Bird லோகோவை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக டோஜ்காயினுக்கு பயன்படுத்தப்படும் நாய் படத்தை மாற்றியுள்ளார்.

அதன்படி, ஏற்கனவே ட்விட்டரின் லோகாவாக இருந்த நீல வண்ண குருவிக்குப் பதிலாக, தற்போது ட்விட்டரில் நாய் படம் இடம்பெற்றுள்ளது. ட்விட்டரின் லோகோ மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, டோஜ்காயின் கிரிப்டோகரன்சியின் மதிப்பும் 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com