
மேற்கு வங்க மாநிலத்தில், பிரதமர் மோடி அவர்கள் வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி மூலமாக கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, கடந்த 2ம் தேதி ஹவுராவில் இருந்து ஜல்பைகுரிக்கு இந்த வந்தே பாரத் ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, ரயில் மால்டா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் ரயிலின் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.
இதையடுதது மறுபடியும் 3ம் தேதி இந்த ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இதுகுறித்தான சிசிடிவி வீடியோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியில் அந்த சமயம் அந்த பகுதியில் 4 பேர் நின்றது பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது போலீசார் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.