நேபாளத்தில் இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி!

நேபாளத்தில் இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் பீதி!

நேபாளத்தை மையம் கொண்டு அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இன்று மதியம் 2.25 மணியளவில் நேபாளத்தில் 4.6 ரிக்டர் அளவுகோலில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மதியம் 2:51 மணியளவில் மீண்டும் 6.2 ரிக்டர் அளவுகோலில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளான (NCR) உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் தொடர்பாக தேசிய புவியியல் ஆய்வு மையத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் பூமியின் மையமான தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாகவும், இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் பூமியின் 5 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேபாளம் மற்றும் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, கட்டடங்கள் குலுங்கியது. இதனால் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினார்கள். டெல்லி மட்டுமல்லாது உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மற்றும் பரேலி பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com