கோவையில் உருவாகும் இரண்டு பிரம்மாண்டங்கள்.. விரைவில் பணிகள் ஆரம்பம்!

Coimbatore
Coimbatore
Published on

கோவையில் பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவு மையம் அமைப்பதற்கு 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகளும் விரையில் தொடங்கவுள்ளன.

கோவையில் ஏற்கனவே தமிழ்நாடு டெக் சிட்டி நிறுவனத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள 321 ஏக்கர் பரப்பளவில்தான் TN டெக் சிட்டி உருவாக்கத்திற்கான மாஸ்டர் ப்ளான் செய்துள்ளனர். அதேபோல் பிரபல ஐடி நிறுவனமான ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் கோவையில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. KGISL SEZ இல் 300 பேருக்கு ஆரம்ப வேலை வாய்ப்புடன் புதிய அலுவலகத்தை ஆரம்பிக்கவுள்ளது.

இவ்வாறு படிப்படியாகக் கோவையில் வேலை வாய்ப்புகளுடன் கூடிய பல நிறுவனங்கள் வரவுள்ளன. கடந்த 2 வருடங்களாகவே கோவையில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் கூட கோவையில் பல்வேறு முதலீடுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதேபோல் கடந்த பட்ஜெட்டிலும் கோவைக்குப் பல அதிரடித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இப்போது வேகமாக வளர்ந்து வரும் கோவைக்குத் தகவல் தொழில்நுட்பம், வாழ்வியல் அறிவியல் விண்வெளி, பொறியியல் துறைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உயர் தொழில்நுட்ப அலுவலகங்களுக்கானத் தேவை அதிகரிக்கின்றது. அந்தவகையில் 20லட்சம் சதுர அடியில் இரண்டுக் கட்டடங்களாக 1100 கோடி மதிப்பிலான அதிநவீன வசதியுடன் தகவல் தொழிநுட்ப பூங்கா கோவையில் உள்ள விளாங்குறிச்சியில் அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த ஐடி பூங்காத் தவிர்த்து மற்றொரு தொழிற்பூங்காவும் அமைக்கவுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
டாக்டரான 3 அடி உயரமுடைய மனிதர்.. ஊக்குவிக்கும் கதை!
Coimbatore

அந்தவகையில் கோவையில் அடுத்தடுத்து பிரம்மாண்ட திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் பிரம்மாண்ட அறிவு மையம் அமைப்பதற்கு இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஒன்று ரேஸ்கார்ஸ் அருகே 6 ஏக்கர் நிலம், மற்றொன்று மத்தியச்சிறை வளாகத்திற்கு அருகில் 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கோவையில் கைத்தறித் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்தத் திட்டம் உட்பட மொத்தம் ஆயிரம் கோடிக்குப் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவையில் மட்டுமல்லாது திருச்சி, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கும் திட்ட அறிக்கைத் தயார் செய்ய 5 கோடி ஒதுக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் வெளியிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com