விமான கண்காட்சியில் இரு விமானங்கள் மோதல்… ஒருவர் பலி!

Plane Crash
Plane Crash
Published on

போர்ச்சுகலின் தென் பகுதியில் நடைபெற்ற விமான கண்காட்சியில் இரண்டு சிறிய விமானங்கள் மோதிக்கொண்டதில், விமானி ஒருவர் உயிரிழந்தார்.

சமீபக்காலமாக, விமானங்கள், ஹெலிகாப்டர் ஆகியவை விபத்துக்குள்ளான வண்ணம் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம், மலேசியாவில் நடுவானில் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில், சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகினர். இது மலேசியாவையே சோகத்தில் ஆழ்த்தியது.

அதேபோல், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் உசைன் அமீர் அப்துல்லாஹியன் உட்பட சில முக்கிய நபர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விப்பத்திற்குள்ளாகியது. இந்த விபத்தில் சிக்கிய அதிபர் உட்பட 8 பேர் பலியாகினர் என்று அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்தன.

இப்படி பல விபத்துக்கள் நடைபெற்றுதான் வருகின்றன. இதற்கு கவனக்குறைவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவரவில்லை.

அந்தவகையில் தற்போது, போர்ச்சுகலில் நடைபெற்ற விமான கண்காட்சியிலும் இரண்டும் விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பேஜவான் கண்காட்சியில் சுமார் 6 விமானங்கள் ஈடுபட்டிருந்தன. அப்போதுதான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

நேற்று மாலை 4.05 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான கண்காட்சிகளின் சாகசங்களில் ஈடுப்படும் Yark Star குழுவைச் சேர்ந்த ஆறு விமானங்களில், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் விமானிகள் இருந்தனர்.

இதையும் படியுங்கள்:
விமானத்தில் ஏற வந்த நடிகர் கருணாஸ் கைப்பையில் துப்பாக்கிக் குண்டுகள்!
Plane Crash

அதில் பயணித்த ஒரு ஸ்பெயின் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒரு விமானி படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழு இதுவரை 30 கண்காட்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், விபத்து ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதுகுறித்து போர்ச்சுகல் தற்காப்பு அமைச்சர் நுனோ மெலோ, விபத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும், விபத்து குறித்த விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com