மெட்ரோவில் நபருக்கு இரண்டு சீல் செய்யப்பட்ட மது பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதி!

மெட்ரோவில் நபருக்கு இரண்டு சீல் செய்யப்பட்ட மது பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதி!

நாட்டின் தலைநகர் டெல்லியில், மெட்ரோவில் நபருக்கு இரண்டு சீல் செய்யப்பட்ட மது பாட்டில்களை எடுத்து செல்ல அனுமதி வழங்கி டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், டெல்லி மெட்ரோவில் மது குடிப்பது கண்டிப்பாக தடை செய்யப் பட்டுள்ளது. மேலும் அதற்காக சில வரைமுறைகளை அறிவித்துள்ளது மெட்ரோ ரயில் நிர்வாகம்.

நாட்டின் தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி மெட்ரோவில் பயணிக்கும் போது மது பாட்டில்களை எடுத்து செல்ல தற்போது அனுமதி வழங்கப் பட்டுள்ளது.மெட்ரோ பயணிகள் பயணத்தின் போது சரியான ஆவணங்களை பராமரிக்குமாறும் மெட்ரோ நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

ஏற்கனவே ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் வழியைத் தவிர டெல்லி மெட்ரோவில் மது பாட்டில்களை கையில் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது டெல்லி மெட்ரோவில் நபருக்கு இரண்டு சீல் வைக்கப்பட்ட மது பாட்டில்கள் எடுத்து செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் கூறுகையில், "சி ஐ எஸ் எஃப் மற்றும் டி எம் ஆர் சி அதிகாரிகள் அடங்கிய குழு பட்டியலை மதிப்பாய்வு செய்தது. திருத்தப் பட்ட பட்டியலின் படி, ஒரு நபருக்கு சீல் செய்யப்பட்ட இரண்டு மது பாட்டில்கள் டெல்லி மெட்ரோவில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸில் உள்ள விதி முறைகளுக்கு இணையாக கொண்டு செல்ல அனுமதிக்கப் படுகிறது" என்று கூறியுள்ளது .

மெட்ரோவில் பயணிகள் யாரேனும் குடி போதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால், அவர்கள் மீது சட்ட விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் டெல்லி மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com