வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரு சக்கர வாகனம் பரிசு!

இரு சக்கர வாகனம்
இரு சக்கர வாகனம்

கர்நாடக மாநிலத்தில் வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்க உள்ளதாக அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது; கர்நாடகாவில் ஒவ்வொரு தொகுதியிலும் 100 இரு சக்கர வாகனங்களை வழங்க வேண்டும் என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் மாநிலம் முழுவதும் சுமார் 28 ஆயிரம் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட  உள்ளன.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரு சக்கர வாகனத்தைப் பெறுவதற்கு வேலையில்லாத தாழ்த்தப்பட்ட ஜாதி மற்றும் பழங்குடியின பட்டதாரி இளைஞர்கள் சேவா சிந்து போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டம் மூலமாக இரு சக்கர வாகனத்திற்கு அரசு சார்பாக 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும், வங்கி மூலமாக 20 ஆயிரம் ரூபாய் கடன்தொகையும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

‘’இந்த இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வேலையில்லா இளைஞர்கள் சுயதொழில் புரிவதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com