நீதிமன்றம் உத்தரவு : உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உதயநிதி பதிலளிக்க உத்தரவு!

நீதிமன்றம் உத்தரவு : உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் உதயநிதி பதிலளிக்க உத்தரவு!

'மாமன்னன்' படத்துக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இம்மாதம் 29ம் தேதி, 'மாமன்னன்' படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில், ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவின் படி, 2018ம் ஆண்டு கே.எஸ். அதியமான் இயக்கத்தில், உதயநிதி, ஆனந்தி, யோகிபாபு நடிப்பில் 'ஏஞ்சல்' என்ற படம் தயாரிக்கப்பட்டு, படப்பிடிப்பு துவங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதகாவும் கூறியுள்ளார்.

இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், 'ஏஞ்சல்' படத்தை நிறைவு செய்யாமல், 'மாமன்னன்' படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்காக பல கோடி செலவிட்டுள்ள நிலையில், இப்படத்தை முடிக்காமல், 'மாமன்னன்' படத்தை வெளியிட்டால், தனக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அதனால், 'ஏஞ்சல்' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை அவர் முடித்துத் தரவேண்டும். அப்படி இல்லாவிட்டால் 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக உதயநிதி வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும் எனவும், அதுவரை, அவர் 'மாமன்னன்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டு கோரியதை அடுத்து, வரும் ஜூன் 28ம் தேதிக்குள் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com