உதயநிதி ஸ்டாலின் கைது: அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம்..!!

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ஆன உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது தந்தை மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் , அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
Stalin arrived anna arivalayam
Stalin conduct Emergency Meetingx
Updated on

இன்று 11 மணி அளவில் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், தஞ்சாவூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நதிநீர் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்று பேசிய உதயநிதி , பெண்களுக்கு கண்ணியக் குறைவு ஏற்படுத்தும் வகையில் , சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக காணொளிகள் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியானது.

இந்த பொதுக்கூட்டத்தில அவர் தமிழக முதல்வர் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் , உதயநிதிக்கு எதிராக காவல் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் புகார் செய்துள்ளனர். முக்கியமாக தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதிக்கு எதிராக , தவெக மகளிர் அணியினர் கொடுத்துள்ள புகார் அடிப்படையில், இன்று உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள உதயநிதி தஞ்சாவூர் நோக்கி காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டு கொண்டிருக்கிறார். காவல்துறை வாகனம் செல்லும் வழியெங்கும் திமுக தொண்டர்கள் ஆங்காங்கே மறியலில் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களிலும் உதயநிதியின் கைதை கண்டித்து திமுக சார்பில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக காவல்துறையும் பல்வேறு இடங்களில் திமுகவினரின் போராட்டத்தை தடுத்து நிறுத்தி, அவர்களை அப்புறப்படுத்தி வருகிறது. ஒரு சில இடங்களில் கூட்டத்தினை கலைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவின் தலைவரும், உதயநிதி ஸ்டாலினின் தந்தையுமான மு.க. ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்திற்கு விரைந்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் முன்னணி தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ,பொன்முடி உள்ளிட்ட திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் அண்ணா அறிவாலயத்தை நோக்கி விரைந்து வருகின்றனர்.

உதயநிதியின் கைது தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன எடுக்கலாம்? என்ன மாதிரி போராட்டங்களை முன்வைக்க வேண்டும், சட்டரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய போராட்டங்களை பற்றியும் , கூட்டணி கட்சிகள் மற்றும் வர்த்த கருத்து உடைய கட்சிகளின் ஆதரவை இந்த விஷயத்தில் பெறவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

Udhayanithi speech
udhayanithi Thanjavur MeetThe Hindu

உதயநிதியின் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் பெரிய போராட்டமாக நடத்துவதற்கு திமுக திட்டமிட்டுள்ளது. இந்த கைதை கண்டித்து கூட்டணி கட்சிகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களையும் மீடியாக்களின் முன்னாள் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ளிட்ட பல பகுதிகளில் திமுகவினர் கடையடைப்பு போராட்டத்தினை நடத்தி வருகின்றனர்.

திமுகவின் மாநில மகளிர் அணி தலைவியும் , பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி உதயநிதியின் கைதை கண்டித்து ஆளும் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். உதயநிதி கைது கண்டித்து அதிமுகவினர் பலரும் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் உதயநிதியின் மீது வழக்குகள் போடப்பட்டாலும் அவரை கைது செய்யவில்லை என்று, அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் முனுசாமி உதயநிதிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதிமுகவினர் சமூக வலைதளங்களில் உதயநிதியின் கைதுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து கருத்து பதிவு செய்து வருகின்றனர். அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உதயநிதியின் மீது போடப்பட்ட வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com