udhyanidthi stalin
udhyanidthi stalin

#Breaking திமுக நிர்வாகிகள் தேர்வு ! மீண்டும் இளைஞரணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின்!

Published on

சேப்பாக்கம் தொகுதி, திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மீண்டும் திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திமுக மாநில இளைஞர் அணிச் செயலாளர், துணைச் செயலாளர்கள் மற்றும் மாநில மகளிர் அணி , மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகள் தொடர்பாக திமுக தலைமை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திமுகவின் இளைஞரணி செயலாளராக சேப்பாக்கம், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தேர்வாகி இருக்கிறார். இளைஞர் அணி துணைச் செயலாளர்களாக எஸ். ஜோயல், ந.ரகுபதி என்கிற இன்பா, நா.இளையராஜா, ப.அப்துல் மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, சி.ஆனந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

udhayanidhi stalin
udhayanidhi stalin

திமுகவின் மாநில மகளிர் அணி தலைவராக இருந்த கனிமொழி எம்.பி, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டதையடுத்து , மாநில மகளிர் அணி தலைவர் பதவி விஜயா தாயன்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன், மகளிர் அணி இணைச் செயலாளராக விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவின் மாநில மகளிர் அணி துணை செயலாளர்கள், மகளிர் தொண்டர் அணி செயலாளர், மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் , மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்கள், மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர்கள், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள், மகளிர் அணி ஆலோசனைக் குழு ஆகிய பொறுப்புகளிலும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com