

விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் நடத்திய போராட்டத்தில் பெண்களுக்கு எதிராக குறிப்பாக நடிகை பற்றி கண்ணியமற்ற முறையில் பேசியதாக கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்
அவர் மீது
BNS, 196 - பகைமையை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்,
BNS,192 - கலவரத்தை தூண்டுதல் பிரிவில் வழக்குப்பதிவு. BNS,296(b) - பொது இடத்தில் அருவருப்பாக பேசுதல் ,
BNS,351 - ஒருவருக்கு மிரட்டல் விடுவது, பிரிவின் கீழ் வழக்கு பதிவு
BNS,352 - பொது அமைதியை சீர்குலைத்தல், ஒருவரை வேண்டுமென்று அவமதித்தல் ,
BNS,79 - பெண்ணை கண்ணிய குறைவாக பேசுதல், மானபங்க படுத்துதல் , ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதுக்கு பின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது .“நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி Cut Copy Paste செய்து பொய் செய்தியை பரப்பியுள்ளனர்.. இதற்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை. சட்டரீதியாக சந்திப்பேன்”- எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கண்டனங்களாக தெரிவித்து வருகின்றனர் .
"ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு என்ற ஒரு சட்டம் இருந்தது அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது . கருத்துக்கு கருத்தால் பதிலளிப்பதே ஜனநாயகத்தின் மாண்பு. கைது நடவடிக்கையை தீர்வாக கருதக்கூடாது" என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு தேமுதிகவின் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
"சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை பங்கேற்க விடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம்" என கனிமொழி திமுக எம்பி ஆன கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார் . "எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால் அரசு வழக்கு தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும் . நாளை தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் அவரை பங்கேற்க விடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம் " என திமுக எம்பி ஆன கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி "தலையாய பிரச்சினைகளில் காட்டப்படாத அவசரத்தை உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையில் காட்டியது ஏன் என்ற கேள்வியை எழுப்பி உள்ளார் .
"12 மணி வரை அவரை கைது செய்வதை தவிர்க்கும் படி உதய நீதிமன்றமே அறிவுறுத்திய பிறகும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் ஒருவரை அதுவும் நாளை சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் கைது செய்ய வேண்டிய அவசரம் இல்லை. தமிழகத்தில் தலையாய பிரச்சினைகளில் கூட காட்டப்படாத அவசரத்தை இந்த கைது நடவடிக்கையில் அரசும் காவல் துறையும் காட்டியதன் பின்னணியில் இருப்பது அரசியல் மட்டும்தான்" என தனது கருத்தை கூறியுள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் அவசர கைது குறித்து பலரும் சமூக வலைத்தளங்களிலும் நேரடியாகவும் ஆதரவாகவும் மாறுபட்ட கருத்துக்களுடனும் வலம் வரும் பரபரப்பான வேளையில் திமுகவின் அமைப்பு செயலாளரான ஆர் எஸ் பாரதி இன்று முதல் இளைய கருணாநிதி உதயநிதி ஸ்டாலின் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
"இப்படித்தான் கருணாநிதியை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர் இன்று அதேபோல் உதயநிதியை கைது செய்து வானில் அழைத்துச் செல்கின்றனர் இன்று முதல் உதயநிதியை இளைய கலைஞர் என அழைப்பதற்கான வழியை விஜய் வகுத்து விட்டார் " என செய்தியாளர்களிடம் திமுக அமைப்பு செயலாளர் ஆன ஆர் எஸ் பாரதி கூறியது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் உதயநிதி கைது நடவடிக்கை குறித்து பொன்முடி, நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் திமுக அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்றும் தெரிகிறது.
இந்த கைது நடவடிக்கை சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆங்காங்கே கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்,திருமாவளவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,
அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், 'இரட்டுற மொழிதல்' என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகளின் மீது பொய்வழக்குப் போடுவதிலேயே முதலமைச்சரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது, ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர். அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு - கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் 'எள்ளல் நடையில்' பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.
சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட - தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும்.
நாளை ( ஆக-05) சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்.
தற்போதைய நிலையில், காவிரிநீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
தஞ்சாவூர் திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நீலாங்கரை இல்லத்தில் கைது செய்யப்பட்ட அவர், உடனடியாகத் தஞ்சாவூருக்கு அழைத்து செல்லப்பட்டு தற்போது தஞ்சாவூர் 1-வது வாக்குமூல நடுவர் நீதிமன்றத்தில் (Judicial Magistrate Court) ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இதனிடையே, சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதை தடுக்கும் நோக்கிலேயே இந்த அவசர கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாககூறி, உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. பகல் 12 மணி வரை கைது நடவடிக்கை கூடாது என நீதிபதி இளந்திரையன் முன்னதாக அறிவுறுத்தியிருந்த நிலையில், நீதிமன்ற கட்டுப்பாடுகளையும் மீறி கைது படலம் அரங்கேறியுள்ளது.
இந்த சூழலில், உதயநிதி ஸ்டாலினின் முன்ஜாமீன் மற்றும் கைதுக்கு எதிரான மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கிறது.