நீங்க நேரம் எடுத்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது சிஎம் சார் – உதயநிதி காட்டம்!

தமிழக முதல்வர் விஜய்யை காட்டமாக X தளத்தில் உதயநிதி விமர்சனம்!
Tamilnadu opposition Leader
uthayanithi stalin
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் ஜோசப் விஜயை இன்று மிக கடுமையான முறையில் தனது X தளத்தில் விமர்சித்து இருந்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் அருகே , விக்கிரவாண்டி – கும்பகோணம் நெடுஞ்சாலை பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர், மிகவும் மோசமான முறையில் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட அந்தப் பகுதியில் அரைகுறையாக புதைக்கப்பட்டுள்ளார். இன்று காலை தகவல் அறிந்த காவல்துறையினர், இளம்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். இதுவரை அவரது இறப்பிற்கு உரிய காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த கொலை பற்றி மிகவும் தீவிரமாக விசாரணையை காவல்துறையை முடக்கி விட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து , உதயநிதி மிகக் காட்டமாக தமிழக முதல்வரை விமர்சித்துள்ளார்.

உதயநிதி பதிவிட்ட அந்த பதிவு

"கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.

இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.

இந்த #SofaModelஅரசு அமைஞ்சது முதல், கொலை - கொள்ளை - பாலியல் வன்கொடுமைன்னு இப்படி குற்றங்கள் நடக்காத நாளே இல்ல.

தேர்தல் பிரச்சாரத்துல பக்கம் பக்கமா பேப்பர் வச்சு, சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய Punch டயலாக் பேசினவர், முதலமைச்சர் ஆனதும் Deep Sleep Mode-க்கு போய்ட்டாரு.

பெண்கள் பாதுகாப்புக்காக நீங்க அறிவிச்ச சிங்கப்பெண்கள் படையோட தொடக்க விழாவை, கடைசி நேரத்துல ரத்து செஞ்சு இருக்கீங்க.

நிகழ்ச்சியை தள்ளி வைச்சு இருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே தள்ளிவச்சுட்டீங்களானு மக்கள் கேட்கிறாங்க.

சிங்கப்பெண் படைனு பேரையும், Uniform-ஐயும் மாத்துறது தான் மாற்றமா? இல்ல, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேணுமா?

நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir. "

#LawAndOrder

இந்த பதிவில் தமிழகத்தில் நடைபெறும் தொடர்ச்சியான குற்றங்களையும், அதற்கு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கையை வலியுறுத்தி பதிவிடப்பட்டிருக்கிறது. மேலும் அவர் தமிழக வெற்றிக் கழகத்தை சோபா மாடல் அரசு என்று பொதுவாக விமர்சித்து இருந்தார். விஜய் தொடங்கிய சிங்கப்பெண் பாதுகாப்பு படை பற்றியும் , அதை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வராததை பற்றியும் உதயநிதி விமர்சித்து இருந்தார்.

உதயநிதியின் X பதிவு தமிழகத்தில் தற்போது வைரலாகி கொண்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியுற்றதை அடுத்து , எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி திமுகவின் சார்பில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் தினசரி தொடர்ச்சியாக தமிழக அரசை விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com