உலக சாதனை படைத்த உடுக்கை இசை பரத நாட்டியம்!

உலக சாதனை படைத்த உடுக்கை இசை பரத நாட்டியம்!
Published on

பாரதப் பாரம்பரியமிக்க இசைக்கருவி உடுக்கை. ஆதியந்தமில்லா இறைவனாம் ஈசனின் திருக்கரத்தை அலங்கரிக்கும் பொருட்களில் உடுக்கையும் ஒன்று. ஆடத் தெரியாதவர்களையும் ஒரு கணம் ஆட வைக்கும் வல்லமை இந்த உடுக்கை ஒலிக்கு உண்டு.

பழைமையும் பெருமையும் மிக்க இந்த உடுக்கை வாத்திய இசைக்கருவியை வாசித்துக்கொண்டே பரத நாட்டியம் ஆடும் கலையை உலக அரங்கம் அங்கீகரிக்க வேண்டும் எனும் நோக்கில் புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மற்றும் சங்கமம் குளோபல் அகாடமி சார்பில் உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி கடற்கரை சாலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் தமிழகம், தெலங்கானா மற்றும் இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு உடுக்கை இசைக்கருவையை தங்கள் கைகளில் வைத்து இசைக்கொண்டே தொடர்ந்து எட்டு நிமிட நேரம் ஆனந்தத் தாண்டவ பரத நாட்டிய நடனமாடி புதிய சாதனையைப் படைத்து இருக்கின்றனர். இந்தப் புதிய நாட்டிய சாதனை, ‘யுனிக் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழும் வழங்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com