உதவி பேராசிரியர் பணிக்கு தேசிய, மாநில தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருப்பது கட்டாயம்!

உதவி பேராசிரியர் பணிக்கு தேசிய, மாநில தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெற்றிருப்பது கட்டாயம்!

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் உதவி பேராசிரியர்களை நேரடியாக நியமிக்க வேண்டும் என்றால் அவர்கள் மத்திய அரசுகள் நடத்தும் NET, SET மற்றும் SLET ஆகிய தேர்வுகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றியிருக்கவேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர்களை நேரடியாக நியமிக்க NET, SET மற்றும் SLET ஆகியவற்றில் ஏதாவது ஒரு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Editor 1

பிஎச்.டி. உதவிப் பேராசிரியராக நியமனம் செய்வதற்கான தகுதி ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என பல்கலைக்கழக மானியக் குழுவின் செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும்,உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு பி.எச்.டி முனைவர் படிப்பை முடித்திருக்கவேண்டும் என்பது Optional ஆக இருக்கும் என்றும், யுஜிசி நெட் தேர்வு முடிவை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் வெளியிட தேசிய தேர்வு முகமை முடிவு செய்திருப்பதாகவும் பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com