NCERT பாடநூல் திருத்தத்தை எதிர்க்கும் கல்வியாளர்களை விமர்சிக்கும் யுஜிசி தலைவர் & ஆதரவு கல்வியாளர்கள்!

NCERT பாடநூல் திருத்தத்தை எதிர்க்கும் கல்வியாளர்களை விமர்சிக்கும் யுஜிசி தலைவர் & ஆதரவு கல்வியாளர்கள்!
Published on

100 க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் குழுவானது  NCERT பாடப்புத்தகங்களில் இருந்த தங்களது பெயரை நீக்கக்கோரி NCERT க்கு கடிதம் அனுப்பி இருந்தது. அவ்விதமாகக் கடிதம் அனுப்பிய பேராசிரியர்களுக்கு NCERT யின் சமீபத்திய 10 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்ட திருத்தங்களில் உடன்பாடில்லாத காரணத்தால் அவர்கள் அவ்விதமாகத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.

ஆனால், 100 க்கும் மேற்பட்ட கல்வியாளர்களைக் கொண்ட மற்றொரு குழுவோ NCERT யின் பாடத்திட்ட மாற்றத்தை வலுவாக ஆதரித்தது. ஜேஎன்யு, ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட இந்தியாவின் உயர்மட்ட கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் அடங்கிய இந்தக் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் எம்.ஜெகதேஷ் குமார், “எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட அந்தக் கல்வியாளர்களின் முணுமுணுப்புக்குப் பின்னால் உள்ள நோக்கம்  கல்வி அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜேஎன்யுவின் முன்னாள் துணைவேந்தரும் இந்நாள் பல்கலைக்கழக மானியக் குழு தலைவருமான பேராசிரியர் எம் ஜெகதேஷ் குமார்  மேலும் கூறுகையில், “இந்த ‘கல்வியாளர்களின்’ எதிர்புக்கும், கண்டனத்திற்கும் இப்போது எந்த அவசியமும் இல்லை. “என்சிஇஆர்டி கடந்த காலங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பாடப்புத்தகங்களின் உள்ளடக்கங்களை, பாடத் திட்டங்களை அவ்வப்போது திருத்தி வருகிறது. NCERT எப்போதுமே அதன் பாடப்புத்தக உள்ளடக்கங்களை பகுத்தறிவு செய்வதில் முழுமையாக நியாயப் படுத்தப்படுகிறது,” என்று அவர் தனது தொடர்ச்சியான ட்வீட்களில் கூறினார்.

அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில் இருந்து தங்கள் பெயர்களை நீக்கக் கோரி NCERT-க்கு கடிதம் எழுதிய கல்வியாளர்களை 106 கல்வியாளர்கள் கொணட NCERT ஆதரவும் குழுவானது, "திமிர்பிடித்தவர்கள் மற்றும் சுயநலவாதிகள்" என்று சுட்டிய ஒரு கடிதத்தில், "தவறான தகவல், வதந்திகள் மற்றும் பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம், தேசிய கல்விக் கொள்கை-2020-ன் அமலாக்கத்தைத் தடம் புரளச் செய்யவும், NCERT பாடப்புத்தகங்களின் புதுப்பிப்பை சீர்குலைக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். - என்று குறிப்பிட்டிருந்தனர்.

அது மட்டுமல்ல "தற்கால வளர்ச்சிகள் மற்றும் கல்வியியல் முன்னேற்றத்துடன் ஒத்திசைந்து புதுப்பிக்கப்பட்ட பாடப்புத்தகங்களை விட 17 வருடங்களுக்க கு முந்தைய அப்டேட் செய்யப்படாத  தகவல்களைக் கொண்ட  பாடப்புத்தகங்களிலிருந்து மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை அவர்களது அறிவார்ந்த திமிரை வெளிப்படுத்துகிறது" என்றும் அவர்கள் கூறினர்.

"தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கான அவர்களின் தேடலில், அவர்கள் கோடிக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்த தயாராக உள்ளனர்" என்றும் அவர்கள்  NCERT பாடத்திட்ட மாற்றத்தை எதிர்த்த ஆசிரியர்கள் குழு மீது  தங்களது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com