வாராரு சண்டியரு;  நீரவ் மோடியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இங்கிலாந்து நீதிபதிகள் உத்தரவு!

நீரவ் மோடி
நீரவ் மோடி
Published on

இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் சிக்கிய வைர வியாபாரி நீரவ் மோடி, இங்கிலாந்துக்கு தப்பியோடினார். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி, நம் நாடு இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை எதிர்த்து நீரவ் மோடியின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, நீரவ் மோடியின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்ததுடன் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி இங்கிலாந்து அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இதுகுறித்து அந்த நீதிபதிகள் தெரிவித்ததாவது;

 நீரவ் மோடியை அவரது சொந்த நட்டுக்கு திருப்பி அனுப்புவது அநியாயமோ அடக்குமுறையோ ஆகாது என்று இங்கிலாந்து நீதிமன்றம் கூறியுள்ளது. ரூபாய் 13,500 கோடி பிஎன்பி வங்கி மோசடி வழக்கில் நிரவ் மோடி முக்கிய குற்றவாளியாக உள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேல்முறையீட்டு விசாரணைக்கு தலைமை வகித்த லார்ட் ஜஸ்டிஸ் ஜெர்மி ஸ்டூவர்ட்-ஸ்மித் மற்றும் நீதிபதி ராபர்ட் ஜே ஆகியோர் தீர்ப்பை அறிவித்தனர்.

இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் நீரவ் மோடி மார்ச் 2019-ல் லண்டனில் கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து, அவர் தென்கிழக்கு லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம், வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. ஆனால் அதை எதிர்த்து நீரவ் மோடி மேல்முறையீடு செய்தார்.

அந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் நீரவ் மோடியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com