உக்ரேன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்த முடியாத பிரம்மோஸ் ஏவுகணை!

உக்ரேன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்த முடியாத பிரம்மோஸ் ஏவுகணை!

ஷ்யா-உக்ரேன் போர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், ரஷ்யர்கள் பயன்படுத்திய ஒரு குறிப்பிட்ட ஏவுகணையை சுட்டு வீழ்த்த முடியவில்லை என உக்ரேன் விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து பிரம்மோஸ் என்ற சூப்பர்சோனிக் ஏவுகணைகளைத் தயாரிக்கின்றனர். இந்த ஏவுகணைகள் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் சென்று இலக்கைத் தாக்கக்கூடியது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ஏவுகணைகளை 'பிரம்மோஸ்' என்றும், ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஏவுகணைகளை 'பி-800 ஓனிக்ஸ் யாக்ஹான்ட்' என்றும் அழைக்கிறார்கள். ஆனால் இரண்டுமே ஒரே ஏவுகணைகள்தான். ரஷ்யா மற்றும் உக்ரேன் இடையேயான போர், 500 நாட்களைக் கடந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில், இரு நாடுகளுமே அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி போர் புரிகின்றனர். 

ரஷ்யாவின் எல்லா விதமான ஏவுகணைகளுமே அதிக அளவில் இந்த போரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரஷ்ய நாட்டுக்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரேன் நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் அதிநவீன ஆயுதங்களை வழங்கி உதவி செய்கிறது. இவற்றைப் பயன்படுத்தி ரஷ்யாவின் பல ஏவுகணைகளை உக்ரேன் ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. 

ஆனால் ரஷ்யாவின் 'பி-800 ஓனிக்ஸ் யாக்ஹான்ட்' ஏவுகணையை மட்டும் எங்களால் சுட்டு வீழ்த்த முடியவில்லை என உக்ரேன் விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணைகள் இலக்கை தாக்கும் போது தரையில் இருந்து பத்து முதல் 15 மீட்டர் உயரத்திலேயே பறக்கிறது. மேலும் இந்த ஏவுகணைகள் மணிக்கு 3000 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாய்வதால் அவற்றை எங்களால் சுட்டு வீழ்த்த முடியவில்லை என உக்ரேன் விமானப்படை கூறியுள்ளது. 

போருக்கு முன்பு ரஷ்ய இராணுவத்திடம் மொத்தம் 470 'பி-800 ஓனிக்ஸ் யாக்ஹான்ட்' ஏவுகணைகள் இருந்தன. ஆனால் இந்த போரில் இதுவரை 123 ஏவுகணைகள் பயன்படுத்திவிட்டனர். அதாவது மொத்த ஏவுகணைகளில் சுமார் 25 சதவீதத்தை ரஷ்யா இழந்துவிட்டது. தற்போதைய சூழ்நிலையில் முக்கிய தாக்குதல்களுக்கு மட்டுமே இந்த ஏவுகணையை பயன்படுத்தி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 

ரஷ்யாவின் பி-800 ஓனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணையைக் காட்டிலும் இந்தியாவின் பிரம்மோஸ் அதிக சக்தி படைத்தது. இது 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கைக் கூட துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக 1500 கிலோமீட்டர் வரை சீறிப்பாய்ந்து இலக்கை தாக்கும், ஹைப்பர்சனிக் ஏவுகணைகளை தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிரம்மோஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் உற்பத்தி தொடங்கவுள்ளது.

இந்த ஏவுகணை மணிக்கு 9000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கக் கூடியது. இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என இந்தியப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com