மாஸ்கோ மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: தீவிரமடையும் ரஷ்யா உக்ரைன் போர்!

மாஸ்கோவில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்ப்பட்ட இடம்
மாஸ்கோவில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்ப்பட்ட இடம்AP IMAGE
Published on

ஷ்யா- உக்ரைன் போரின் அடுத்த திருப்பமாக, மாஸ்கோ நகரின் முக்கிய கட்டடத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் உக்ரைனின் ஒடேசா துறைமுகப் பகுதி மீது ரஷ்யப் படைகள் மூன்று நாள்கள் தாக்குதல் நடத்தின. முன்னதாக, ரஷ்யாவசம் உள்ள கிரீமியா கடல் பாலத்தின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்குப் பதிலடிதான் அது என மாஸ்கோ விளக்கம் அளித்தது. இந்த நிலையில் வாரத் தொடக்கமான நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில், ரஷ்ய பாதுகாப்பு உளவுத் துறையின் அலுவலகக் கட்டடம் சேதம் அடைந்ததாக மேற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொம்சோமோல்ஸ்கை அவன்யூ என்கிற அந்தப் பகுதியில், குடியிருப்பு அல்லாத இரு கட்டடங்கள் தாக்கப்பட்டன என்று மாஸ்கோ மேயர் செர்கெய் சோப்யானின் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருப்பது சர்வதேச பயங்கரவாதச் செயல் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மரியா சகோரவா கூறியுள்ளார்.

மாஸ்கோவில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்ப்பட்ட இடம்
மாஸ்கோவில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்ப்பட்ட இடம்

உக்ரைன் தரப்பிலோ, அதன் துணைப் பிரதமர் மிகைலோ பெட்ரோவ், ரஷ்யா, கிரீமியா மீது இரவு டிரோன்கள் தாக்குதல் நடத்தின என்பதை அதிகாரபூர்வமாகத் தெரிவித்தார். (ரஷ்ய) ஆக்கிரமிப்பாளர்களின் வான்பரப்பில் மின்னணு போர்முறை, வான்பாதுகாப்பு ஆகியவற்றில் தற்காத்துக்கொள்ளவே இயலாதவர்களாக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இரண்டு டிரோன்கள் மட்டுமின்றி மூன்றாவதாக ஒரு ஹெலிகாப்டர் வகையிலான டிரோன் ஒன்றும் வந்ததாகவும் அதை மாஸ்கோவின் கல்லறைப் பகுதியில் அது விழுந்துவிட்டதாகவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்த மூன்று சம்பவங்களுக்கும் பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு தண்டனை அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.பொதுவாக, ரஷ்யாவின் உள்பகுதிக்குள் நடத்தப்படும் தாக்குதல் குறித்து அரிதாகவே பேசும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, கடந்த ஞாயிறன்று பேசுகையில், ஒடேசா துறைமுகத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதெல்லாம் ஒரு புறம் இருக்க, மாஸ்கோ மீதான டிரோன் தாக்குதல்களின் பின்னணி முக்கிய கவனம் பெற்றுள்ளது. ரஷ்யப் பகுதிகளுக்கு உள்ளே இருந்தே, உக்ரைன் தரப்பால் அமர்த்தப்பட்ட சக்திகள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்பதுதான் புதிய பரபரப்பு. கடந்த மே மாதம் ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை உக்ரைனின் டிரோன்களால் தாக்கப்பட்டது. அப்போது, அதைப் பற்றிக் கருத்துக்கூறிய அமெரிக்கா, போகிற போக்கில் உள்நாட்டுக்குள் இருந்தே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக்கூடும் என்று குறிப்பிட்டது இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com