நேட்டோ கூட்டமைப்பில் இணைக்க உக்ரைனை அழைத்திருக்க வேண்டும்: செலன்ஸ்கி ஆதங்கம்!

நேட்டோ கூட்டமைப்பில்  இணைக்க உக்ரைனை அழைத்திருக்க வேண்டும்: செலன்ஸ்கி ஆதங்கம்!

நேட்டோ கூட்டமைப்பின் இராணுவ உதவி முடிவுகள் நல்லதுதான் என்றும் ஆனால் நேட்டோ கூட்டமைப்பில் தங்களைச் சேர்க்க அழைப்பு விடுத்திருக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார்.

லித்துவேனியா நாட்டின் தலைநகர் வில்லியனசில் இரண்டு நாள்கள் நடைபெற்ற நேட்டோ இராணுவக் கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்று முடிவடைந்தது. பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி பேசியதாவது, “ இதே சமயம், நேட்டோவில் உறுப்பு நாடாக உக்ரைன் சேரவேண்டுமானால் என்னென்ன செய்யவேண்டும் என்கிற நிபந்தனை செயல்திட்டம் எதுவும் தேவையில்லை எனக் கூறியிருப்பது எங்களுக்கான ஓர் அங்கீகாரம்; இது முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது, நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்கும் உடன் இருந்தார். அப்போது பேசிய ஜென்ஸ் ஸ்டோல்டென், நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளின் படையினருடன் உக்ரைன் படையினர் பயிற்சி பெற்றது, நல்ல ஒத்துழைப்பான அனுபவம் என்றும் அவர் பெருமிதப்பட்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா போர்த் தாக்குதலில் ஈடுபட்டதிலிருந்து, உக்ரைனின் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களுக்கு நேட்டோ நாடுகளைச் சேர்ந்த படைகள் பயிற்சியை வழங்கியுள்ளன. முன்னதாக, மாநாட்டுக்கு முன்னர் உக்ரைன் சில நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் நேட்டோவில் அதை உறுப்பினராக்க முடியும் என்று தெரிவித்து, அதனால் கூட்டமைப்பில் இணைப்பதற்கான காலக்கெடுவைத் தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால், இரண்டு நாள் மாநாட்டுக்குப் பிறகு அப்படியான நிபந்தனை ஏதும் இல்லையெனத் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

இத்துடன், உக்ரைனுக்கு பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து நாடுகளின் சார்பில் மேலும் படை உதவிகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதை தான் மிகுந்த சாதகமாகப் பார்ப்பதாகவும் செலன்ஸ்கி கூறியுள்ளார். இகுறித்து செய்தியாளர்களிடம் செலன்ஸ்கி அளித்த பேட்டியில், “மாநாட்டின் முடிவுகள் எங்களைப் பொறுத்தவரை நல்லபடியாகத்தான் இருக்கின்றன; ஆனால் என்ன, எங்களை கூட்டமைப்புக்குள் சேர்க்க அழைப்பு விட்டிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும் என்று செலன்ஸ்கி தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com