ரஷ்யாவின் 20 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரேன். தொடரும் ட்ரோன் தாக்குதல்கள்.

ரஷ்யாவின் 20 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரேன். தொடரும் ட்ரோன் தாக்குதல்கள்.

மீபத்தில் உக்ரேனில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் அப்பார்ட்மெண்ட் ஒன்று தீப்பிடித்து எறிந்தது. மேலும் ரஷ்யா தொடர்ந்து ட்ரோன் தாக்குதல் செய்து வரும் நிலையில், அவர்களின் 20 ட்ரோன்களை உக்ரேன் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. 

கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது ரஷ்யா போர்தொடுக்கத் தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை சுமார் 15 மாதங்களாக அங்கு போர் தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் உக்ரேன் போரில் பின்தங்கி இருந்தாலும், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் உதவியினால் தற்போது வரை தாக்குப்பிடித்து வருகிறது. பின்னர், போரில் ரஷ்யா பின்னடைவை சந்தித்ததால், பெரும்பாலான உக்ரேன் நகரங்களிலிருந்து தங்கள் படைகளை திரும்பப் பெற்றது. இருப்பினும் அவர்கள் போரை நிறுத்தவில்லை. 

உக்ரேனுக்கு அமெரிக்கா உதவி செய்வதாலேயே இந்த அளவுக்கு அவர்கள் நிலைத்து நிற்கிறார்கள். சமீபத்தில் கூட உக்ரேனுக்கு 2.5 பில்லியன் டாலரை அமெரிக்கா வழங்கி, 31 போர் பீரங்கங்களையும் வழங்குவதாக உறுதியளித்தது. இந்த இரு நாடுகளின் போர் ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருவதால், இது சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

என்னதான் உலக நாடுகள் போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினாலும், அவர்களுக்குள் இன்னும் சமரசம் ஏற்படவில்லை. போர் காரணமாக உக்ரேனில் உள்ள கட்டிடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள் போன்ற அனைத்துமே தாக்குதலில் சிக்கி, சேதமடைந்து, மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. 

இரு தினங்களுக்கு முன்பு நிவாரணப் பொருட்கள் பெற வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு பெண் உயிரிழந்தார். இதற்கு முன்பாக உக்ரேன் தலைநகர் கீவில், ரஷ்யா சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் ரஷ்யாவின் பல ஏவுகணைகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இருப்பினும் அந்த ட்ரோன் தாக்குதலில் உக்ரேன் நாட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் முழுமையாக தீப்பற்றி எரிந்தது. இதில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றாலும் அதிக நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 

இதுபோன்ற தொடர் ட்ரோன் தாக்குதல்களால் உக்ரைன் நாட்டில் பதற்றம் அதிகரித்துள்ளது. இவர்களுக்குள்ளான போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. இவர்களுக்கு மத்தியில் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com