அடுத்த அதிரடி - ரஷ்ய போலீஸ் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷ்யா- உக்ரைன் போர்
தாக்குதலுக்கு உள்ளான காவல் நிலையம்
தாக்குதலுக்கு உள்ளான காவல் நிலையம்

ஷ்யத் தலைநகர் மாஸ்கோ மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் இன்னொரு பகுதியில் காவல் நிலையம் ஒன்று தாக்கப்பட்டுள்ளது. பிரியான்ஸ்க் வட்டாரத்தின் முன்னணி நிலையில் உள்ள இந்தக் காவல் நிலையத்தின் மீது உக்ரைன் படைகள் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின.அந்த மாகாணத்தின் ஆளுநர் இத்தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

“ டுருப்செவ்ஸ்கி மாவட்டத்தில் உக்ரைனியப் படைகள் தாக்குதலை நேற்று இரவு மேற்கொண்டன. ஒரு டிரோன் காவல் நிலையத்தைத் தாக்கியது. யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.” என்று மாகாண ஆளுநர் அல்க்சாண்டர் பொகோமாஸ் டெலிகிராம் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக் கிழமை, மாஸ்கோ, கிரீமிய பகுதிகளைக் குறிவைத்து உக்ரைன் படைகள் தாக்க முயன்றன என்றும் அதன் டிரோன்களை தாக்கி வீழ்த்திவிட்டதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் டிரோன் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த ரஷ்யா, இத்தாக்குதல்கள் பதிலடி தருவதற்கான முகாந்திரத்தைக் கொண்டு உள்ளன என்றும் கூறியிருந்தது.

ரஷ்யக் குடிமக்கள் மீதான இது இன்னொரு வகை பயங்கரவாதத் தாக்குதலாகவே நாங்கள் கருதுகிறோம்; இதில் இராணுவத் தாக்குதலுக்கு எந்த காரணமும் இல்லை. இது அப்பட்டமான மக்கள் மீதான தாக்குதல் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்தது என சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் கருத்துக்கு பதிலடியாகப் பேசியுள்ள உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியோ, ரஷ்யப் படைகள் இதுவரை நினைத்துக்கொண்டு இருந்த சிறப்பு இராணுவத் தாக்குதல் இன்றுதான் நடந்திருக்கிறது. இன்னும் சில வாரங்களுக்கு தொடரவும் செய்யும் என்று கூறியிருக்கிறார்.

படிப்படியாக, இப்போது போரானது ரஷ்யாவின் நிலப் பரப்புக்குள் திரும்பத் தொடங்கி இருக்கிறது; அதாவது அதன் இராணுவத் தளங்களும் அடையாள மையங்களும் இயற்கை நீதிப்படி தவிர்க்க முடியாத இடத்துக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் செலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்புக்கும் இடையிலான போரில் மேற்குலக நாடுகள் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் லித்துவேனியாவில் கூடி, உக்ரைனுக்கு தீவிர இராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்தன. அதையடுத்த மறுநாளே அமெரிக்காவின் படைபல உதவிகள் உக்ரைனைப் போய்ச் சேர்ந்தன. நேட்டோ நாடுகளின் நவீன இராணுவத் தளவடங்கள் வந்தபின், உக்ரைனின் தாக்குதல்கள் ஒவ்வொன்றும் வீச்சானதாக உள்ளது. ரஷ்யத் தரப்புக்கு இதனால் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com