ஐ நா பொதுச் செயலாளர் இன்று இந்தியா வருகை!

அன்டோனியோ குட்டரெஸ்
அன்டோனியோ குட்டரெஸ்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான அன்டோனியோ குட்டரெஸ், கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார். பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக கடந்த ஜனவரி மாதம் அவர் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இந்நிலையில், அன்டோனியோ குட்டரெஸ்  3 நாள் அரசுமுறைப் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அவரை பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் சந்தித்து பேசவுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்தியா வருவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் சர்வதேச அளவில் சில முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com