ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: இந்தியாவில் முதன்முறையாக இன்று தொடக்கம்!

ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்
Published on

 ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் சிறப்பு கூட்டம் முதன்முறையாக இந்தியாவில் இன்று தொடங்குகிற்து.

 இன்று மும்பையிலும் நாளை டெல்லியிலும் நடைபெறும் இக்கூட்டத்தில் 'தீவிரவாதச் செயல்களுக்காக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை எதிர்த்தல்' என்ற கருத்து விவாதிக்கப்பட  உள்ளது.

மேலும் கிரிப்டோ-கரன்சி மூலம் பயங்கரவாத நிதியுதவி மற்றும் புதிய கால பயங்கரவாதத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளது.

 ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகத்தின் துணைப் பொதுச்செயலாளர் விளாடிமிர் வோரோன்கோவ் தலைமையில் கூட்டம் இன்று மும்பையில் நடைபெறுகிறது.

மேலும் இந்தக் கூட்டத்தில் பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி ஜேம்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அல்பேனியா வெளியுறவு அமைச்சர்கள் உட்பட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com