செல்போன் யூஸ் பண்ணுவதால் குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு.. யுனெஸ்கோ எச்சரிக்கை!

மாதிரி படம்
மாதிரி படம்Intel

செல்போன் பயன்படுத்துவதால் 2 முதல் 17 வயதுள்ள குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதாக யுனெஸ்கோ கூறியுள்ளது. அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைப்படுத்துதலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.

தொழில்நுட்பங்களை கல்வியில் புகுத்துவது நல்லது என்றாலும், செல்போன்களால் ஆபத்து அதிகம் என்கிறது அந்த அமைப்பு. அதிக நேரம் செல்போன் திரைகளை மாணவர்கள் பார்க்க நேரிடுவதாகவும், இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், உணர்வுகளின் நிலைத்தன்மை மாறுபடுவதாகவும் சுட்டிக்காட்டுகிறது. 14 நாடுகளில் கற்றலில் பாதிப்பை செல்போன் ஏற்படுத்தியுள்ளதாகவும் யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

பள்ளி மாணவர்கள் செல்போன்களை தவிர்த்தால் அவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகிறது. செல்போனால் 2 முதல் 17 வயதுள்ள குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், கோபம் அதிகரிப்பு, சுய கட்டுப்பாடு பாதிப்பு ஆகிய பிரச்சினைகள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. பல நாடுகளிலும் மாணவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும் யுனெஸ்கோ எச்சரித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டில் பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை பிரான்ஸ் நாடு தடை செய்தது. இந்த மாதம் நெதர்லாந்து நாடு பள்ளிகளில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் தடையை அறிவித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com