கோடை காலத்தில் தடையில்லா மின் விநியோகம்!

மின்சார விநியோகம்
மின்சார விநியோகம்

கோடை காலத்தில் தடையில்லா மின் விநியோகத்தை வழங்கும் வகையில் மின்துறை கண்காணிக்க வேண்டும் என மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது. மின் கம்பங்கள் முறையாக பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மின்வாரியம் உத்தரவிட்டிருந்தது.

கோடை காலத்தில் மின்சார தேவை அதிகரிக்கும். எனினும், தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கடந்த சில மநாட்களுக்கும் முன்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் மணிவண்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

கோடை காலம் தொடங்குவதால் வெயில் அதிகரித்துள்ளது. அதனால், மின்சார தேவையும் உயர்ந்துள்ளது.இதை கருத்தில்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப் பட்டுள்ளது. கோடை காலத்தில் மின்வெட்டு இல்லாதவகையில் பார்த்துக்கொள்ளுமாறு மின்சார வாரியம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பெருநகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் கோடை காலம் முடிவடையும் வரை சீரான மின் விநியோகம் வழங்குவதை கண்காணிக்க வேண்டும்.

மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குள் கூடுதல் உயரழுத்த மின் விநியோகப் பிரிவில் பராமரிப்புப் பணிகளை முடிக்க வேண்டும்

அதிகளவில் மின்தடை ஏற்படும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகியபகுதிகளுக்கு தலா ரூ.20 லட்சமும், சென்னை தெற்கு, வடக்கு, ஸ்ரீபெரும்புதூர், திருவலம், விழுப்புரம், கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு தலா ரூ.15 லட்சமும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வழங்க வேண்டும்.

EB
EB

இதை பரிசீலித்த தொடரமைப்புக் கழகம், கோரிக்கையின் அடிப்படையில் ரூ.1.65 கோடி அவசரகால நிதியை ஒதுக்கியுள்ளது.

மேலும் கோடை காலத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும்

உத்தர விடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம், கோடைகால மின்சார தேவை பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com