நாடாளுமன்றத்தில் 2026-27 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும்.
குறிப்பாக கடந்த வருடம் பொது பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய வரி விதிப்பு முறையின் கீழ் வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தினார். அதாவது, ரூ.12 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்றைய பட்ஜெட்டில் சாதாரண குடிமக்கள் தாக்கல் செய்யும்படி வருமான வரி தாக்கல் நடைமுறை எளிமையாக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும் தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கலுக்கு மார்ச் 31 வரை அவகாரம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரிச் சட்டத்தில் ஈவுத்தொகைக்கான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வருமானத்தை மறைப்பவர்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.