டெல்லி விஞ்ஞான் பவனில் 49வது GST கூட்டம்! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு!

டெல்லி விஞ்ஞான் பவனில் 49வது GST கூட்டம்! மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு!

டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 49வது கூட்டம், இன்று காலை 12 மணிக்குத் துவங்கியது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து இன்று விவாதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும். அப்படி இருக்கையில், 47வது கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சண்டிகரில் நடைபெற்றது.

அதன் பின்னர் ஐந்தரை மாதங்கள் கழித்து கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் 48வது கூட்டம் நடைபெற்றது. தற்போது இதனையடுத்து 49வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சில முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை கேசினோக்கள், ரேஸ் கோர்ஸ்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் ஆகியவற்றிற்கு வரிவிதிப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கான அறிக்கையை மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சரவைக்குழு முன்வைத்தது. ஆனால் கோவா இதனை எதிர்த்ததால் இது தொடர்பா ஒருமித்த கருத்த எட்ட முடியவில்லை. எனவே இந்த முறை இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.

பென்சில் ஷார்பனர்கள் மற்றும் தினை சார்ந்த சுகாதார பொருட்கள் போன்றவற்றிக்கு விலை குறைப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் அறிவிக்கப்படலாம். இது எல்லாவற்றுக்கும் மேலாக பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. முக்கியமாக இது குறித்து அறிவிப்புகள் வெளியாக நிறைய வாய்ப்புள்ளது. இது குறித்து மாநில அரசுகளுக்குள் ஒரு ஒற்றைக் கருத்து உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளா். இந்த கூட்டம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னமும் வெளிவரவில்லை.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com