மத்திய நிதியமைச்சர் அமெரிக்காவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்வதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட தகவல்:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன அமெரிக்காவில் தனது அரசு முறை சுற்றுபயணத்துக்கு இன்று செல்கிறார். அங்கு சர்வதேச நிதி ஆணையம் , உலக வங்கி ஆண்டு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த சுற்றுப்பயணத்தில் ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் அந்நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். பின்னர் ஜப்பான், தென்கொரியா, சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, போன்ற நாடுகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார்.

இதற்கடுத்து அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் ஏலன், சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவரான டேவிட் மால்பாஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இறுதியாக, வாஷிங்டன் ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் "இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு" என்ற தலைப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றவுள்ளார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com