மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் மகள் திருமணம், பெங்களூரில் மிக எளிமையான முறையில் நடந்தது பலரது புருவங்களை ஆச்சர்யத்தில் உயர்த்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்க பட வில்லை.
பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்டமாக பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது மகள் திருமணத்தை ஆடம்பரம் எதுவும் இன்றி எளிமையாக நடத்தியது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
அதமாரு மடத்தின் வேதமுறைப்படி திருமணம் நடை பெற்றது. திருமண விழாவில் உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வ பிரிய தீர்த்த சுவாமிகள் மற்றும் ஈச பிரிய தீர்த்த சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர்.
மத்திய நிதி மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பரகலா வாங்மயிக்கு, பிரதீக் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், நேற்று எளிமையான முறையில் வீட்டில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
திருமண விழாவில் அரசியல் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப் பட்டதாக தெரிகிறது..இது தொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய அமைச்சரவையில் செல்வாக்கு மிக்க அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் தனது ஒரே மகள் திருமணத்தை மிக எளிமையாக நடத்தியுள்ளது பலரது பாராட்டினையும் ஆச்சர்யத்தினையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது.