தீர்வைத் தராத தற்கொலைகள் – அரசுப்பள்ளி ஆசிரியை தற்கொலை!

தீர்வைத் தராத  தற்கொலைகள் – அரசுப்பள்ளி ஆசிரியை தற்கொலை!
Published on

த்தனை விழிப்புணர்வுகள் இருந்தாலும் நம் கண்ணில் விழுந்து மனதில் பதியும் இது போன்ற தற்கொலை செய்திகள் பரிதாபத்துக்கு பதில் நம்மிடம் கோபத்தையே வரவைக்கிறது. பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களின் கோழைத்தனமான இந்த செயல்கள் தன்னம்பிக்கை மீதான சந்தேகத்தையே அவரிடம் படித்த பிள்ளைகளுக்குத் தரும்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை போலீஸ் நிலையம் அருகே உள்ள ஏ.கே. நகரை சேர்ந்தவர் அம்சபாண்டி மனைவி கிருஷ்ணவேணி இவர்களது மகன் விஸ்வநாத் நாராயணன். கணவர் பிரிந்து  சென்று விட்ட நிலையில் கிருஷ்ணவேணி தனது மகனுடன் வசித்து வந்தார். கிருஷ்ணவேணி செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு வேதியியல் பிரிவு ஆசிரியராக  பணியாற்றி வந்தார்.

கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி

பத்தாம் வகுப்பு படித்து வரும் மகன் விஸ்வநாத் நாராயணன்  சரியாக பள்ளிக்குச் செல்லாமலும் சரியாக படிக்காமலும் இருந்து வந்தார். இதை கிருஷ்ணவேணி கண்டித்து வந்துள்ளார் . இந்த சம்பவம் தினமும் நடைபெற்று வந்தது. நேற்று காலையில் மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில்  தனது தாயாரை விஸ்வநாத்  எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த கிருஷ்ணவேணி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடனடியாக செங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து கிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். இந்த செய்தியை அறிந்ததும் அவருடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளிக்கூடம் முன்னதாகவே விடப்பட்டது.

இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்துவதற்கு பதில் மனதில் கோபத்தையே வரவைக்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆசிரியராக எத்தனையோ குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அற்புதமான பொறுப்பும் கடமையும் உள்ள ஆசிரியை தன் ஒரு பிள்ளைக்காக யோசிக்காமல் உயிரை மாய்த்துக் கொள்வது நியாயமற்ற செயல். இதனால் அவரின் மகனின் எதிர்கால வாழ்வும் கேள்விக்குறியாகி உள்ளது .

சமீபத்தில் கண்கள் இழந்த இளைஞர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரின் தன்னம்பிக்கை வெகுவாக புகழப்பட்டது. மற்றவர்களுக்கு உதாரணமாக வாழும் இவர் போன்றவர்கள் இடையில் இந்த ஆசிரியை போன்றவர்களும் இருப்பது வேதனை. பிரச்சினையைத் தரும் இறைவன் அதற்கான தீர்வையும் சேர்த்தே தருவான் என்பதை அறியாத அளவுக்கு அவர் படிக்காதவரும் அல்ல. ஆனால் ஏன் இந்த முடிவு? சற்றே நேரம் தந்து கொஞ்சம் சிந்தித்து இருந்தால் அவர் மகனுக்கும் நல்ல பாதையைக் காட்டியிருக்க முடியும்.

தற்கொலைகள் மேலும் மேலும் பிரச்சினைகளை தருமே தவிர, தீர்வாகாது என்பதை மனதில் பதிய வைத்து வரமாக கிடைத்த வாழ்க்கையை நம்பிக்கையுடன் வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com