ஆகஸ்ட் 1 முதல் மாற்றப்படும் UPI விதிகள் – உங்களுக்குத் தெரிய வேண்டியது இவை தான்..!

பணம் அனுப்புவதற்கு முன், பணம் பெறுபவருடைய பெயர் (வங்கியில் பதிவு செய்யப்பட்டது) UPI ஆப்பில் காட்டப்படும், இது தவறுகளைத் தவிர்க்க உதவும்.
UPI
UPI
Published on

இந்தியாவின் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI)க்கு ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. ஏனெனில் தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) திறனை மேம்படுத்துவதற்கும், சிஸ்டம் சுமையை நிர்வகிப்பதற்கும், மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் புதுப்பிக்கப்பட்ட இயக்க வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த உள்ளது.

போன் பே, கூகுள் பே, பேடிஎம் மற்றும் இதைப் போலவே UPI-யால் இயக்கப்படும் அனைத்து பயன்பாடுகளிலும் இந்த புதுப்பிக்கப்பட்ட விதிகள் அமல்படுத்தப்படும்.

இதில் பேலன்ஸ் சரிபார்ப்பு, ஆட்டோ-டெபிட் பரிவர்த்தனைகள், கணக்கு இணைப்பு மற்றும் பரிவர்த்தனை நிலை கேள்விகள் போன்றவை புதிய கட்டுப்பாடுகளை உள்ளடக்கியுள்ளன.

UPI பயனர்களுக்கு முக்கிய மாற்றங்கள்

  1. பேலன்ஸ் சரிபார்ப்பு வரம்பு
    ஒரு UPI ஆப்பில் ஒரு நாளைக்கு பேலன்ஸை 50 முறை மட்டுமே சரிபார்க்க முடியும். இது உச்ச நேரத்தில் சர்வரை சுமையை குறைக்க உதவும். 50 முறை எட்டினால், அந்த ஆப்பில் 24 மணி நேரம் சரிபார்க்க முடியாது.

  2. ஆட்டோ-பேலன்ஸ்
    ஒவ்வொரு UPI பரிவர்த்தனையும் முடிந்தவுடன், உங்கள் கணக்கின் பேலன்ஸ் தானாக காட்டப்படும், அதனால் தனியாக சரிபார்க்க வேண்டிய அவசியம் குறையும்.

  3. கணக்கு இணைப்பு வரம்பு
    ஒரு UPI ஆப்பில் ஒரு நாளைக்கு 25 வங்கி கணக்குகளை மட்டுமே இணைக்க முடியும். இது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு விவரங்களை பெறுவதற்குப் பொருந்தும்.

  4. பரிவர்த்தனை நிலை சரிபார்ப்பு
    பயனர்கள் ஒரு நிலுவையிலுள்ள பரிவர்த்தனையின் நிலையை மூன்று முறை மட்டுமே சரிபார்க்க அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு முறையும் 90 விநாடி இடைவெளி வேண்டும்.

  5. ஆட்டோ-டெபிட் நேர கட்டுப்பாடு
    OTT சந்தா கட்டணம் (Netflix, Amazon Prime, Disney+ Hotstar) போன்ற மாதச் சந்தா, EMI, அல்லது முதலீட்டுத் தவணைகள்(Mutual fund SIPs) போன்ற ஆட்டோ-டெபிட் பரிவர்த்தனைகள் போன்றவை இனிமேல் மிக முக்கியமான நேரக் கட்டுப்பாட்டுடன் (non-peak hours) மட்டுமே செயல்படுத்தப்படும்.

  • காலை 10:00 மணிக்கு முன்

  • இரவு 9:30 மணிக்கு பின் 

  • பணம் பெறுபவரின் பெயர் தெரியும் வசதி
    பணம் அனுப்புவதற்கு முன், பணம் பெறுபவருடைய பெயர் (வங்கியில் பதிவு செய்யப்பட்டது) UPI ஆப்பில் காட்டப்படும், இது தவறுகளைத் தவிர்க்க உதவும்.

கூடுதல் விதிகள்

  • ஒரு செயலியில் ஒரு நாளில் அதிகபட்சம் 25 முறை மட்டுமே வங்கி கணக்குத் தகவலை (balance, account linking, fetch details) பெற அனுமதிக்கப்படும்

  • பரிவர்த்தனை நிலை சரிபார்ப்புக்கு 3 முயற்சிகள் மட்டும், ஒவ்வொரு முறையும் 90 விநாடி இடைவெளி.

  • பணம் அனுப்பும் முன்,கணக்கு வைத்திருப்பவரின் பெயர் தெரிந்தால், மோசடி தடுக்கப்படும்.

இந்த மாற்றங்களை அனைத்து UPI ஆப் வழங்குநர்களும் ஜூலை 31க்குள் பயன்பாடுகளில் சேர்க்க வேண்டும், மேலும் ஆகஸ்ட் 1 முதல் அமலாகும். NPCI, விதிகளை பின்பற்றாதவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளது. இது உங்கள் பணப்பரிவர்த்தனைகளை பாதுகாப்பாகவும் எளிமையாகவும் ஆக்கும், ஆகவே இந்த மாற்றங்களை பயன்படுத்தி புதிய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com