டெல்லி மெட்ரோவில் யூபிஐ கட்டண வசதி அறிமுகம்!

டெல்லி மெட்ரோவில் யூபிஐ கட்டண வசதி அறிமுகம்!
Published on

நாட்டிலுள்ள மெட்ரோ நிறுவனங்களில், முதன் முறையாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம், பயணச்சீட்டு வழங்கும் பொறிகளில் (ticket vending machines) யூபிஐ (Unified Payment Interface), அதாவது ஒருங்கமைக்கப்பட்ட பணப்பரிவர்த்தனை இடைமுகப்பு வாயிலாக பயணச்சீட்டுக்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

https://twitter.com/OfficialDMRC/status/1687032354852966400?s=20

ந்த ஏற்பாடு 2018 ஆம் ஆண்டு முதலே, நோய்டா, காஸியாபாத் போன்ற சில இடங்களில் பரிசோதனை முறையில் இருந்தாலும், தற்போது பரவலான அளவில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.  சமீபத்தில் 125 மெட்ரோ ரயில் நிலையங்களிலுள்ள பயணச்சீட்டு வழங்கும் பொறிகள் இந்த வசதிக்காக மேம்படுத்தப் பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் மற்ற எல்லா மெட்ரோ நிலையங்களிலும், இந்த வசதி வந்துவிடு மென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் நிறுவனம், பிரான்ஸ் எஸ்.ஏ.எஸ் மற்றும் வருவாய் வசூலிப்பு நிறுவனத்துடன் இணைந்து, டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனமானது இந்தச் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது.  

இதன் மூலம், பயணச்சீட்டுகள் வாங்குவது எளிதாகிறது. நேரடியாக , வங்கிக்கணக்கிலிருந்து பணத்தை எடுத்து, பயணச்சீட்டு வாங்க முடியும். தனியாக, பணத்திற்கான மெட்ரோ அட்டையின் வாலட்டில் பணத்தை நிரப்ப வேண்டிய அவசியமில்லை. கைப்பேசியின் மூலமே பணத்தை கட்டிவிட முடியும். பணத்தாள்கள் எடுத்துச் செல்வது, பற்று அல்லது கடன் அட்டைகளை எடுத்துச் செல்வது போன்றவை அவசியமில்லை. பயணத்தை , பயணச்சீட்டு வழங்கும் பொறியில் தேர்ந்தெடுத்தப் பின்னர், பணம் கட்டும் நேரத்தில், க்யூ ஆர் குறியீடுயும் ஒரு விருப்பத் தேர்வாக கொடுக்கப்படுகிறது. அந்த க்யூஆர் குறியீட்டினை மேவி, பணத்தை நம்மால், எந்த ஒரு யூபிஐ செயலியின் மூலம் செலுத்த முடியும். 

இதனைப் போலவே, மற்ற மெட்ரோ நிறுவனங்களும் , இத்தகைய சேவையைக் கூடிய சீக்கரம் அமல் படுத்த வாய்ப்புள்ளது. இத்தகைய யூபிஐ வழியாக பணம் செலுத்தும் சௌகரியத்தை, நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேரம் மிச்சமாவதுடன், பணத்தை கையில் எடுத்துச் செல்லும் அவசியமும் குறைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com