மக்களுக்கு அடுத்த ஷாக்..! இனி ₹2000-க்கு மேற்பட்ட GPay , Paytm பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம்..?

UPI கட்டணம் பற்றிய மத்திய அரசின் புதிய மசோதா மற்றும் அதன் நோக்கங்கள்
UPI கட்டணம்
UPI கட்டணம்AI Image
Updated on

தற்போது ₹2000 மேற்பட்ட UPI வணிக பணப்பரிவர்தனைகளுக்கு, கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம், என்ற தகவல் நாடு முழுக்க பரவி வருகிறது. இந்த தகவல் யூபிஐ பயனாளர்களை அதிர்ச்சிடைய செய்துள்ளது. பாஜக அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்த போது நாட்டின் பணப் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மயமாக்கும் யோசனைகளில் ஈடுபட்டது. அப்போது அவற்றை நடைமுறைப்படுத்த சிக்கல்கள் இருக்கலாம், என்று எதிர் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் தொடங்கி யூபிஐ போன்ற பணப்பரிவர்த்தனைகள் தொடங்கியது. GPay , Paytm , Phonepay போன்ற தளங்கள் யூபிஐ பண பரிவர்த்தனை சேவைகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளன. உலகிலேயே அதிக அளவு யுபிஐ பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஜூலை மாதத்தில் மட்டுமே 23.7 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றன, அவற்றின் மொத்த மதிப்பு ₹29.9 லட்சம் கோடி ஆகும். இது உலகிலேயே மிகவும் பெரிய பொருளாதார நடவடிக்கையாக இருக்கிறது.

நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரிவிதிப்பு மற்றும் இதர சட்டங்கள் (திருத்த) மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மூலம் அறிவிக்கப்பட்ட மின்னணுப் பணப்பரிவர்த்தனை மீது வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவை வழங்குநர்கள் MDR விதிப்பதற்கான தடையை நீக்கக் கோரியுள்ளனர். ஆனால், இதை எப்போது செயல்படுத்துவது என்று மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

புதிய கொள்கையின் படி , பொதுவாக வணிகர்களுக்குச் செய்யப்படும் ₹2,000-க்கு மேற்பட்ட யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்டணம் விதிக்க வாய்ப்புள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் , இந்த திட்டம் சாதாரணமாக தனி நபர்களுக்கு பணப்பரிவர்தனை செய்யும் போது இது போன்ற கட்டணங்கள் எதுவும் விதிக்கப்படாது.

​அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, ₹2000 குறைந்தபட்ச பண பரிவர்த்தனைகளின் அளவுகோலாக இருக்கிறது. இந்த அளவு ஒட்டுமொத்த UPI பரிவர்த்தனைகளில் வெறும் 5 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது. ஆனாலும், இதே அளவு பணப்பரிவர்த்தனைகள் மொத்த பரிவர்த்தனை மதிப்பில் 65% என்ற அளவில் உள்ளன.

UPI Money
UPI Money

இதனால், நமது அன்றாட தேவைகளுக்கு யூபிஐ பணப்பரிவர்த்தனைகள் செய்வதில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. பால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் போன்ற அன்றாட தேவைகளுக்கும் அல்லது ஆட்டோ, டாக்சி போன்ற பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களுக்கும் சிக்கல் ஏற்படுத்தாது.

​இந்த புதிய நடைமுறைகள் அமலுக்கு வந்தாலும் , 95 சதவீதப் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது. அனைத்து வணிகங்களும் இந்தக் கட்டணங்களை வாடிக்கையாளர் மீது திணிக்கப் போவதில்லை. மேலும் இதற்கு விதிக்கப்படும் கட்டணம் மிகவும் சிறிய தொகையாகவே இருக்கும் என்று நிதித்துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

​கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு இதே போன்ற MDR நடைமுறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ஆனால் பெரும்பாலான வணிகர்கள் இதற்கு உண்டான தொகையை வாடிக்கையாளர்களிடம் வசூலிப்பது இல்லை. கிரெடிட் கார்டு MDR-ஐப் பொறுத்தவரை அதில் கட்டண முறைகள் ஒழுங்கப்படுத்தாத காரணத்தினால் , பணப் பரிவர்த்தனை மதிப்பில் 3% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம். ₹20 லட்சம் வரையிலான டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு 0.4% என்ற உச்சவரம்பும், அதைவிட அதிக மதிப்புக்கு 0.9% என்ற வரம்பும் நடைமுறையில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
"கவனமா இருங்க மக்களே!" ஆகஸ்ட் 1 முதல் உங்கள் பணப்பையை பாதிக்கும் புதிய மாற்றங்கள்!
UPI கட்டணம்
இதையும் படியுங்கள்:
Credit card smart use: வட்டியே இல்லாம இலவசமா பர்சேஸ் பண்ண சூப்பர் ட்ரிக்ஸ் இதோ!
UPI கட்டணம்
logo
Kalki Online
kalkionline.com