UPSC 2023 - ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக விருப்பமா?

UPSC 2023 - ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக விருப்பமா?

இந்தியாவின் முக்கிய அரசுப் பணிகளுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் (UPSC 2023) தேர்வுக்கு விண்ணப்பிக்க தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிக உயர்ந்த பணியிடங்களுக்கான தேர்வான இந்திய குடிமை பணிகள் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமை பணி சேவைகளின் தேர்வுக்கான அறிவிப்பு இது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆண்டு அறிவிப்பில் 1105 காலிப்பணியிடங்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும் தேர்வர்கள் விண்ணப்பிக்கப் பிப்ரவரி 21 ஆம் நாள் வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் நிலை தேர்வு 2023 மே மாதம் 28 ஆம் நாள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் குடிமைப் பணிகள் (சிவில் சர்வீஸ் தேர்வு) முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலையில் நடைபெறும். முதல் நிலைத் தேர்வு நடைபெறும் தேதி : 28.05.2023.

இந்த தேர்வு 9 தாள் அடங்கிய எழுத்து தேர்வாக நடைபெறும். அதாவது விரிவான விடையளித்தல் தேர்வு. இவற்றில் 2 தாள்கள் தகுதித் தேர்வு மட்டுமே. முதன்மைத் தேர்வு மொத்தம் 1750 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.  நேர்முகத் தேர்வு மொத்தம் 275 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பட்டியல் வெளியிடப்படும்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 21 வயது நிறைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதாக 32 ஆம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 01.08.2023 அன்று 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு டிகிரி பெற்றிருக்க வேண்டும்.

பொது பிரிவுக்கு ரூ. 100., SC/ST, பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

SC /ST பிரிவு தேர்வர்கள் இத்தேர்வை மீண்டும் எழுதக் கட்டுப்பாடுகள் இல்லை.

OBC 9 முறை மற்றும் PwBD/பொதுப் பிரிவினர் 9 முறை எழுதலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உள்ள சலுகைகளுக்கு அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

இந்தியக் குடிமைப் பணி தேர்வுகளுக்கு https://upsconline.nic.in/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 ஆன்லைனில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க https://upsconline.nic.in/upsc/OTRP/index.php என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CSP-23-engl-010223 என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com