UPSC தேர்வின் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!

UPSC தேர்வின் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!
Published on

மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் UPSC தேர்வின் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கான பதவிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி, கடந்த மே மாதம் 28 ஆம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெற்றது.

கடந்த மே மாதம் நடைபெற்ற முதல்நிலை தேர்வினை, 50,000 - க்கும் அதிகமானோர் எழுதி உள்ளனர். அதில் 14,624 பேர் மெயின் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வர்கள் https://upsc.gov.in என்ற இணைய தளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தேர்வு விதிகளின் படி, இந்த அனைத்து தேர்வர்களும் முதன்மைத் தேர்வு 2023-க்காக விரிவான விண்ணப்பம் ஃபார்ம் -1 (டிஏஎப்-1)-1ல் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய வழிகாட்டுதல்கள், விண்ணப்ப தேதி, சமர்ப்பிப்பு ஆகிய விவரங்கள் ஆணையத்தின் இணைய தளத்தில் அறிவிக்கப்படும்.

இறுதித் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டப் பிறகு, முதல்நிலைத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண்கள், கட்-ஆஃப் மதிப்பெண்கள், விடைகள் ஆகியவை ஆணையத்தின் இணையதளமான https://upsc.gov.in - ல் வெளியிடப்படும்.

தேர்வு எழுதியவர்கள் தங்களுக்கானத் தகவல்கள், தெளிவுகள் ஆகியவற்றை புதுதில்லி ஷாஜகான் சாலையில் உள்ள டோல்பூர் இல்லத்தில் உள்ள தேர்வுக் கூடக் கட்டிடம் அருகில் அமைக்கப் பட்டுள்ள அரங்கில் அணுகி தெரிந்து கொள்ளலாம். மேலும் 011-23385271, 011-23098543 அல்லது 011-23381125 என்ற தொலைப்பேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com