ஈரானின் கச்சா எண்ணையை 30 நாட்களுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்..!

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்Editor 1
Published on

உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய அமெரிக்கா 30 நாட்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின் அனுமதியால் கப்பல்களிலுள்ள 140 மில்லியன் ஈரானின் கச்சா எண்ணெய் சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது. 

உலகளாவிய எரிசக்தி சந்தையில் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், விநியோக அழுத்தத்தைக் குறைக்கவும் ஈரானின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்க அமெரிக்கா தற்காலிக அனுமதி அளித்துள்ளது. ஏப்ரல் 19 வரை 30 நாட்களுக்கு கடலில் தேங்கி கிடக்கும் சுமார் 140 மில்லியன் பேரல் ஈரான் எண்ணெய் விற்பனை செய்யப்பட உள்ளது. விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டாலும் இந்த எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயை ஈரான் எளிதாக அணுக முடியாதபடி அமெரிக்கா கட்டுப்பாடுகளை தொடர்ந்து பராமரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை ஈரானிய எண்ணையை அதிகம் வாங்கும் சீனா போன்ற நாடுகளுக்கு சாதகமாக அமையும்.

ஈரான் வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது. போர் தொடங்கிய கடந்து 20 நாட்களில் மட்டும் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 60% வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக சவுதி அரேபியாவின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவின் ஆலை  மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது.

ஐரோப்பா, சீனா உள்ளிட்ட முக்கிய சர்வதேச சந்தைகளிலும் கச்சா எண்ணெய் விலை அதிக அளவில் உயர்ந்து வருவதால் இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. அத்துடன் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி உயர்வு காரணமாக வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். வளைகுடா நாடுகளில் நிலவும் இந்தப் போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்திற்கே சவாலாக மாறிவிடுமோ என்ற அச்சத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணையை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
#JUST IN: தமிழகத்தில் எகிறியது மினரல் வாட்டர் விலை - முழு விபரம்!
கச்சா எண்ணெய்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com