ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது சரியா? உலக நாடுகள் கருத்து... அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு!

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பது குறித்து உலக நாடுகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
US attack Iran Opinions world nations
US attack Iran Opinions world nations
Published on

அணு ஆயுத நாடாக மாறுவதை தடுக்கும் நோக்கில் ஈரான் மீது இஸ்ரேல் கடந்த 13-ந்தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் சளைக்காமல் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. ஒரு வாரத்துக்கு மேலாக நீடிக்கும் இந்த சண்டையில் அமெரிக்காவும் இணைந்தது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கியது. ஈரானின் நட்டான்ஸ், இஸ்பகான் மற்றும் போர்டோ அணுசக்தி தளங்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது. அதுவும் மலையை குடைந்து ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள போர்டோ அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் மூலம் தாக்கி உலகையே அதிரச்செய்தது. இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டு தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்காவின் இந்த தாக்குதலால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறிய ஈரான், அத்துடன், இதற்கு முன் பார்த்திராத பேரழிவை அமெரிக்கா சந்திக்கும் என ஈரான் தலைவர் காமேனி நேரடியாக எச்சரிக்கையும் விடுத்தார்.

இது தொடர்பாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் மீதான இந்த தாக்குதல் மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும். மேலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும்’ என்று கூறியுள்ளார்.

டிரம்ப்பின் இந்த செயலுக்கு அமெரிக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த கொடூர தாக்குதல் குறித்து உலக நாடுகள் தங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன. ஒரு சில நாடுகள் நடுநிலையாக இருந்து விட்டன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
உன் நாட்டில்தான் நீ பெரிய ஆளு! – ட்ரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி!
US attack Iran Opinions world nations

ரஷியா: அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்தியது தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பேசும் திட்டம் எதுவும் இல்லை. தேவைப்பட்டால் பேசுவார்கள். அதே நேரம் இது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

லெபனான்: ஜனாதிபதி ஜோசப் அவுன், அமெரிக்க குண்டுவீச்சு எந்த நாடும் தாங்க முடியாத ஒரு பிராந்திய மோதலுக்கு வழிவகுக்கும். எனவே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். போரின் அழிவுகளை லெபனான் மக்கள் நன்கு அறிந்தவர்கள். எனவே மோதலுக்கு வித்திடுவதை தவிர்க்க வேண்டும்.

இங்கிலாந்து: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தற்போதைய நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும். ஈரானின் அணுசக்தி திட்டம் உலகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலை உள்ளது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது, அந்த அச்சுறுத்தலைத் தணிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

நியூசிலாந்து: வெளியுறவு மந்திரி வின்ஸ்டன் பீட்டர்ஸ், அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். ராணுவ நடவடிக்கையை விட பேச்சுவார்த்தை நீடித்த தீர்வை வழங்கும்.

சீனா: ஈராக்கில் செய்தது போன்ற தவறை ஈரானிலும் அமெரிக்கா செய்கிறதா என்று அந்த நாட்டு ஊடகத்தில் கருத்து வெளியாகியுள்ளது.

தென் கொரியா: தென் கொரிய மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் நிலையான அன்றாட வாழ்க்கையைத் தொடர்வதையும் உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை.

பாகிஸ்தான்: வெளியுறவு அலுவலகம், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களை பாகிஸ்தான் கண்டிக்கிறது. நாடுகளிடையே பதற்றம் அதிகரிப்பது குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம். இந்தத் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் மீறுகின்றன. தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது.

ஜப்பான்: பிரதமர் ஷிகெரு இஷிபா, நிலைமையை விரைவில் அமைதிப்படுத்துவது மிக முக்கியம். ஈரானின் அணு ஆயுத தயாரிப்பு முயற்சியை தடுக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா: மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஈரானின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இப்போது அமைதிக்கான நேரம் இது என்ற அமெரிக்க ஜனாதிபதியின் அறிக்கையை நாங்கள் கவனிக்கிறோம்.

பிரான்ஸ்: வெளியுறவு மந்திரி ஜீன் நோயல் பாரோட், ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய தாக்குதலை ஆதரிக்கவில்லை. இதனை பிரான்ஸ் கவலையுடன் பார்க்கிறது. மோதல் நீடிக்க வழிவகுக்கும் எந்தவொரு தீவிரத்தையும் தவிர்க்க வேண்டும்.

ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களும் ஹமாஸும் அமெரிக்க தாக்குதல்களைக் கண்டித்துள்ளன. சியோனிச மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான ஈரானின் போராட்டத்தில் ஹவுதிகள் ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.

இந்நிலையில், இரு நாடுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், இரு நாடுகளும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் போரை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் இன்று அறிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து ‘இப்போதைக்கு போர் நிறுத்தம், இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த ஒப்பந்தம் எதுவும் செய்யப்படவில்லை’ என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இஸ்ரேல் vs ஈரான்: சட்டமா, சுயபாதுகாப்பா?
US attack Iran Opinions world nations

இதற்கு முன் இதேபோல் தான் இந்தியா-பாகிஸ்தான் இடையே தாக்குதல் நடந்த போது, நான் தான் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com