கடத்தப்பட்ட சுவாமி சிலைகள்; இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைப்பு!

சுவாமி சிலைகள்
சுவாமி சிலைகள்

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட சுவாமி சிலைகள் உட்பட ரூ.33 கோடி மதிப்பிலான 307 பழங்கால கலைப் பொருட்களை அமெரிக்க அதிகாரிகள் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் பெரும்பாலானவை சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை.

நியூயார்க் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த  307 பழங்கால கலைப் பொருட்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.33 கோடி ஆகும். இந்நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் மற்றும் அமெரிக்க உள் துறை பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவின் (எச்எஸ்ஐ) தற்காலிக துணை சிறப்பு அதிகாரி டாம் லாவ் பங்கேற்றனர்.

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த சிலைகளில் பெரும்பாலானவை சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவையாகும்.  சர்வதேச அளவில் தமிழகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தொன்மையான சிலைகளை வாங்கி, அமெரிக்காவில் விற்பனை செய்து வந்தார் சுபாஷ் கபூர். இது தொடர்பான புகாரின் பேரில், 2011-ல் இன்டர்போல் உதவியுடன் சுபாஷ் கபூர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார்.

2012-ல் நாடு கடத்தப்பட்ட சுபாஷ் கபூர், இப்போது தமிழ்நாட்டின் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com