
இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி அமெரிக்க நெறியாளர் ஒருவர் ஹிஜாப் அணியவில்லை எனக் கூறி நேர்காணலை தவிர்த்திருக்கிறார். இது உலகெங்கும் பெரும் சர்ச்சையை கிளறியுள்ளது. ஹிஜாப் அணிய மறுத்த அமெரிக்க நெறியாளருடனான நேர்காணலை தவிர்த்த இரான் அதிபருக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரானில் ஹிஜாப் விவகாரத்தால் பல்வேறு போராட்டங்களும் சர்ச்சைகளும் வெடித்து கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரானில் எல்லா நேரங்களிலும் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தலைமுடியை முழுதும் மறைக்கும் வகையில் கட்டாயம் ஹிஜாப்பை அணிய வேண்டும் என்று, இரானிய அரசு கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. இதன் காரணமாக, இரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சிக்கு அந்த நாட்டுப் பெண்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.