புதினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து!

ஜோ பைடன்
ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புதினுக்கு எதிரான கைது பிடிவாரண்ட் நியாயமானது தான் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பைடன் கூறுகையில், " உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதற்காக போர்க்குற்றம் செய்ததாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது நியாயமானது. இந்த நடவடிக்கை மிகவும் வலுவான கருத்தை உருவாக்குகிறது" என்று குறிப்பிட்டார்.

உக்ரைன் நாடு மீது ரஷியா படையெடுத்து கடந்த பிப்ரவரியுடன் ஓராண்டு கடந்து உள்ளது. அந்நாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை உள்ளிட்ட தடைகளை விதித்தும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது.

pudin
pudin

சர்வதேச அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி, ரஷியா தொடர்ந்து போரை நீட்டித்து வருகிறது. இந்நிலையில், போரில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஷியா, உக்ரைனில் உள்ள குழந்தைகளை மீட்டு ரஷியாவுக்கு நாடு கடத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது என கூறப்படுகிறது.

இதற்கு சர்வதேச குற்ற நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஓராண்டுக்கும் மேலாக உக்ரைனில் நடந்து வரும் போரில், ரஷிய படைகள் போர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன என்றும் அதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினே பொறுப்பு என்றும் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, அதிபர் புதின் மற்றும் ரஷிய அதிகாரியான மரியா அலெக்சீயேவ்னா வோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவையும் பிறப்பித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, அதிபர் புதின் மற்றும் ரஷிய அதிகாரியான மரியா அலெக்சீயேவ்னா வோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவையும் பிறப்பித்து உள்ளது.

புதினின் கைது வாரண்ட் உத்தரவுக்கு உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com