அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேத்தி திருமணம்; வெள்ளை மாளிகையில் தடபுடல்!

நவோமி பைடன்
நவோமி பைடன்

அதிபர் ஜோ பைடன் பேத்திக்கு நேற்று வெள்ளை மாளிகையில் தடபுடலாக  திருமணம் நடந்தது. இதில் அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட அவரது உறவினர்கள் மற்றும்  நண்பர்கள் என சுமார் 250 பேர் பங்கேற்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன், வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர். தற்போது 28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி மாணவரான 24 வயதான பீட்டர் நீல்லும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் அமெரிக்க வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் நேற்று நடந்தது.

அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்பாக சில அதிபர்களின்  மகள்களுக்கு வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்துள்ளன. ஆனால் இப்போது முதன்முறையாக அதிபர் பதவியில் இருக்கும்போது அவரது பேத்திக்கு  வெள்ளை மாளிகையில் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com