அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி; விவேக் ராமசாமியின் வைரல் வீடியோ!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி; விவேக் ராமசாமியின் வைரல் வீடியோ!

லக வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அந்நாட்டின் அதிபராக இருக்கிறார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைய உள்ளதால், அமெரிக்காவில் இப்போது இருந்தே அதிபர் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கி உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் என அக்கட்சி சார்பில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கூறப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. குடியரசுக் கட்சி சார்பில் தாமே மீண்டும் போட்டியிடப்போவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், தற்போது விவேக் ராமசாமியும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்குத் தயாராகிவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் 16 வயது இளைஞன் ஒருவனுடன் உரையாடிய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாக அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் விவேக் ராமசாமி, ‘இளைஞர்கள் எப்படித் தன்னம்பிக்கையோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். வெற்றிகரமான வாழ்க்கைக்கான சூத்திரம் என்ன என்பது பற்றிப் பேசி இருக்கிறார். இவரது இந்தப் பேச்சு அமெரிக்க வாழ் மக்களைப் பெரிதும் கவர்ந்து இருப்பதோடு, அவருக்கு ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com