மணிப்பூர் விவகாரம்:பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி ஆதரவு!

Mary Millben
Mary Millben
Updated on

அமெரிக்க நடிகையும் பாடகியுமான மேரி மில்பென், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநில மக்களின் நலன்களுக்காக பிரதமர் மோடி பாடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமது அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு பதிலளித்து மக்களவையில் பிரதமர் மோடி வியாழக்கிழமை உரையாற்றிய நிலையில் நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

மேரி மில்பென், தமது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா, தங்கள் நாட்டு தலைவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் வெற்றுக் கோஷம் போடுகின்றன.ண்மை எப்போதும் மக்களவை விடுவிக்கும்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த நேரத்தில் “சுதந்திர மணி ஒலிக்கட்டும்” என்று அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத் தலைவர் மார்டின் லூதர் கிங் ஜூனியரின் மேற்கோள்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, தங்கள் நாட்டு தலைவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. மணிப்பூரில் உள்ள தாய்மார்கள், மகள்கள் மற்றும் பெண்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். உங்களின் சுதந்திரத்துக்காக பிரதமர் மோடி எப்போதும் போராடுவார். உண்மை என்னவென்றால், இந்திய கலாசாரத்தை இழிவுபடுத்தும், குழந்தைகள் தேசிய கீதம் பாடுவதை தடுக்கும், வெளிநாட்டில் தங்கள் நாட்டை தரக்குறைவாக பேசுவது என்பது நல்ல தலைமையாகாது. அவர்களுக்கு எந்த கொள்கையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது மேரி மில்பென், அவரை நேரில் சந்தித்தார். வாஷிங்டனில் ரொனால்டு ரீகன் கட்டட வளாகத்தில் இந்தியாவின் தேசிய கீத்த்தை பாடினார். இந்த கூட்டத்தில் இந்திய சமூகத்தினரிடம் பிரதமர் மோடி

பேசினார். ஜனகன மன தேசிய கீத்த்தை பாடியதும் மேரி மில்பென் பிரதமரின் காலை தொட்டு வணங்கி ஆசிபெற்றார்.

கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகள் செயலாற்றி வருவதாக்க் கூறினார். பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் அத்துமீறல்களையும் மன்னிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க துணிவு இல்லாத்தால்தான் எதிர்க்கட்சியினர் தமக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்த்தாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

--------------

logo
Kalki Online
kalkionline.com