உதகை தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக இன்று முதல் துவங்குகிறது.
உதகை தாவரவியல் பூங்காவில் நாளை தொடங்கும் 125-வது மலர்க் கண்காட்சியின் சிறப்பம்சமாக பல்லாயிரம் மலர்களால் தேசிய பறவையான மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் இந்தாண்டு 125-வது மலர்க் கண்காட்சி இன்று மே மாதம் 19 முதல் 23 வரை 5 நாட்கள் நடைப்பெறுகிறது. தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. சுற்றுலாப் பயணிகளை கவர 325 ரகங்களில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
மலர்க்கண்காட்சியை ஒட்டி மலர்க் காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 35,000 வண்ண மலர்த் தொட்டிகளில் செடிகள் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வந்தன. அவை தற்போது பூத்து குலுங்குகின்றன. இந்த தொட்டிகள் காட்சி மாடத்தில் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலா மாவட்டமான நீலகிரியில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்கள் கோடை சீசனாகும். அப்போது இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை காணவும் லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் தோட்டக்கலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.இந்த கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும், கண்காட்சிகளும் நடத்தப்படும். அதில் சிறப்பான ஒன்று தான் உதகை மலர் கண்காட்சி.
தொடக்க விழாவை சிறப்பிக்கும் வகையில், இறக்குமதிசெய்யப்பட்ட பல்வேறு மலர்களின் அணிவகுப்பு, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் கொய்மலர் அலங்காரம், அரியவகை மலர் செடிகளின் தொகுப்பு,பல்வேறு மலர்களின் பலவகைஅலங்காரங்கள், டூலிப்ஸ் மலர்கள் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மே 27 , 28 ஆகிய தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 63-வது பழக்கண்காட்சி நடத்த தோட்டகலை துறை முடிவு செய்துள்ளது. இந்த கண்காட்சிகளில் பல்வேறு வடிவங்கள் மற்றும் உதகை உருவாகி 200 ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு பல்வேறு காட்சிகளும் நடத்தப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற மலர் கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.