உறைபனியில் உறைய வைக்கும் ஊட்டி!

உறைபனியில் உறைய வைக்கும் ஊட்டி!
Published on

மலைகளின் அரசி உதகையில் குறைந்த பட்ச வெப்பநிலையாக 2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. சமவெளி பகுதிகளில் "0" டிகிரி செல்சியஸுக்கு கீழே போய்விட்டது. இந்த கடும் உறை பனி பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. பச்சை புல்வெளிகளில் உறை பனி பொழிவு ஏற்பட்டு வெள்ளை பட்டு கம்பளம் போல் காட்சி தருகிறது. குறிப்பாக, ஊட்டியில், புறநகர் பகுதிகளான சாண்டிநல்லா, தலைகுந்தா பகுதியில், சில நாட்களாக நள்ளிரவு நேரத்தில், "0' டிகிரி வெப்ப நிலை காணப்படுகிறது.

ஊட்டியில் வருடந்தோறும் நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி முடியும் வரை பனிக்காலம் நிலவும்.. ஆனால், இந்த வருடம், காலநிலை மாறுபாட்டால், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை நீலகிரி மாவட்டத்தில் தாமதமாக தொடங்கின.

நவம்பர் 22-ம் தேதி ஊட்டியில் உறைபனிப் பொழிவு தொடங்கிய ஒரு வாரத்துக்குள், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவிட்டது. அப்போதுதான், மேன்டூஸ் புயல் தாக்கம் காரணமாக உறைபனி முற்றிலும் நின்றுவிட்டது... இதற்கு பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஊட்டியில் மறுபடியும் உறைபனியின் தாக்கம் நிலவியது.. அப்போது, ஊட்டி தாவரவியல் பூங்கா, தலைக்குந்தா, படகு இல்லம், பைக்காரா, மார்க்கெட், ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளில் பனி படர்ந்து நிறைந்திருந்தது.. இதனால் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் பனி கொட்டி கிடந்தது.

உதகை மக்கள் இந்த தொடர் பனிப்பொழிவால் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.. கடந்த வாரம் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் ஓரளவு அதிகரித்த நிலையில், மறுபடியும் கடும் குளிர் வாட்ட தொடங்கிவிட்டது.. பச்சை புல்வெளிகளில் உறை பனி பொழிவு ஏற்பட்டு வெள்ளை பட்டு கம்பளம் போல் காட்சி தருகிறது.

பகல் நேரங்களில் ஓரளவு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை 3 மணிக்கே குளிர் சூழ்ந்துவிடுகிறது.. அதிகாலை 9 மணி வரை இந்த குளிர் விலகாமல் உள்ளது. உறைபனியால் கடும் குளிர் நிலவுவதால் காலை 9 மணிக்கு பின்பும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். குளிரை சமாளிக்க பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி வெப்பத்தை ஏற்படுத்திக் கொண்டனர்

உடலை உறைய வைக்கும் குளிரால், மாலைக்குள் , மக்கள் வீடுகளுக்குள் அடைந்து விடுகின்றனர். இதனால், நகர வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பனியால் புல்வெளிகள், தேயிலை தோட்டங்கள் கருகி விடுவதை தடுக்க ஊட்டி தாவரவியல் பூங்கா உட்பட சுற்றுலா தலங்களில் உள்ள புல்வெளிகளின் மீது, காலை நேரங்களில், "பாப்-அப் ' முறையில் நீர் பாய்ச்சபடுகிறது. அதிகாலை நேரங்களில், விவசாயிகள் "ஸ்பிரிங்லர்' மூலம் நீர் பாய்ச்சுகின்றனர்.

பனியின் தாக்கம் இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com