உத்தர பிரதேச மாநிலம் இடைத்தேர்தல்; டிம்பிள் யாதவ் வெற்றி!

டிம்பிள் யாதவ்
டிம்பிள் யாதவ்

உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில், சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட டிம்பிள் யாதவ் 2 லட்சத்து 88 ஆயிரத்து 461 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை தொகுதிக்கும், ராம்பூர் மற்றும் கதாலி சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் பதம்பூர், ராஜஸ்தானில் சர்தார்சாகர், பிஹாரில் குர்ஹானி, சத்தீஸ்கரில் பானுபிரதாப்பூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 5-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

உத்தர பிரதேசம் மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாதி எம்.பி.யாக இருந்த முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் இறந்ததையடுத்து அத்தொகுதிக்கு முலாயமின் மருமகளும், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார்.

இதில் பாஜக வேட்பாளர் ரகுராஜ் சிங் சக்யாவை விட 2,லட்சத்து 89 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று டிம்பிள் யாதவ் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி குறித்து  டிம்பிள் யாதவ் கூறுகையில், ''இந்த வெற்றிக்காக பாடுபட்ட சமாஜ்வாடி கட்சி ஆதரவாளர்களுக்கும் என் மீது நம்பிக்கை வைத்த மெயின்புரி மக்களுக்கும் நன்றி. இந்த வெற்றி மறைந்த முலாயம் சிங் யாதவுக்கு செலுத்தும் புகழஞ்சலி'' என்று பதிவிட்டுள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com