ஆவின் நிறுவனத்தில் காலி பணியிடங்கள்! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படவுள்ளது!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

கடந்த ஆட்சிக் காலத்தில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 201 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஆவின் நிறுவனத்தில் காலியாக காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான ஆணையை பால்வள ஆணையர் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆட்சி காலத்தில் மாநிலத்தில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் நடைபெற்ற நியமனங்களில் பல்வேறு முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டது.அதனை தொடர்ந்து இந்த நியமன ரத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, 2021 -22ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது, ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர் வரையிலான பதவியிடங்கள், அரசின் ஆணை பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே நடத்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் மு. நாசர் அறிவித்தார்.

ஆவின் இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் கடந்த ஆட்சியில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 201பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆவினில் லியாக உள்ள 322 பணியிடங்களை TNPSC மூலம் நிரப்புவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர் வரையிலான 322 காலியிடங்களின் எண்ணிக்கையை பால்வள ஆணையர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பியுள்ளார். விரையில் இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த பதவிகளுக்கான கல்வித் தகுதிகள் உள்ளிட்ட இதர பொது நிபந்தனைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே இந்த பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான ஆணையை பால்வள ஆணையர் வெளியிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com