
நாடு முழுவதும் அதிவேக ரெயிலாக இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியா இப்போது விரைவான நகரமயமாக்கலுடன் வளர்ந்து வரும் ஒரு நாடு. இதன் மூலம் மெட்ரோ ரெயில் தற்போது இந்தியாவில், குறிப்பாக இந்தியாவின் பெருநகரங்களில் மிகவும் பிரபலமான விரைவான போக்குவரத்து முறையாக மாறி வருகிறது. தற்போது 13 நகரங்களில் இந்திய மெட்ரோ அமைப்பு செயல்பட்டு வருகிறது.
வந்தே பாரத் ரயில் மூலம் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல குறைந்த நேரமே ஆவதால் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த ரயில் சேவையை நீட்ட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்யவே அதிகம் விரும்புவர். உடல் அலைச்சலை கொடுக்காததாலும், அதிக சௌகரியத்தை கொடுப்பதாலும் பலரும் ரயில் பயணத்தையே விரும்புவர். அதிலும் இந்த வந்தே பாரத் ரயில் கூடுதல் சௌகரியத்தை வழங்குகிறது.
அந்த வகையில் தற்போது இந்தியன் ரயில்வே துறையானது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதன் மூலமாக ரயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு டிக்கெட்டுகளை பயணிகள் புக்கிங் செய்யலாம். இந்த அம்சம் கடைசி நிமிடத்தில் பயணத்தை திட்டமிடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
அதுமட்டும் அல்லாமல் ரயிலில் உள்ள இருக்கைகள் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுவதையும் இந்த அம்சம் உறுதி செய்கிறது. இந்த அம்சமானது தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்கும் குறிப்பிட்ட சில வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எந்தெந்த ரயில்களுக்கு இந்த அம்சம் பொருந்தும்? இந்தியன் ரயில்வே துறையை பொருத்தவரை, இந்த அம்சமானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இயங்கும் 8 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பொருந்தும்.
ரயிலின் பட்டியல்: 20631 மங்களூரு சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல். 20632 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூரு சென்ட்ரல். 20627 சென்னை எக்மோர் - நாகர்கோவில். 20628 நாகர்கோயில் - சென்னை எக்மோர். 20642 கோயம்புத்தூர் - பெங்களூரு. 20646 மங்களூர் சென்ட்ரல் - மட்கான். 20671 மதுரை - பெங்களூரு. 20677 டாக்டர் MGR சென்னை சென்ட்ரல் - விஜயவாடா.
IRCTC வெப்சைட் அல்லது அப்ளிகேஷனுக்கு செல்லுங்கள். www.irctc.co.in அல்லது IRCTC Rail Connect மொபைல் அப்ளிகேஷனுக்கு செல்லுங்கள். IRCTC லாகின் ID மற்றும் பாஸ்வேர்ட் இருந்தால் அதனை பயன்படுத்தி லாகின் செய்யவும். முதல்முறையாக இதனை பயன்படுத்துகிறீர்கள் என்றால் புதிய அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கவும்.
பயண விபரங்களை என்டர் செய்ய வேண்டும். இடம், ரயில் நிலையம், பயண தேதி மற்றும் வந்தே பாரத் ரயிலில் பயணிக்க விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும். காலியாக இருக்கும் இருக்கைகளை சரி பார்க்கலாம். உங்கள் பயண வகுப்பு மற்றும் ரயில் ஏற இருக்கும் நிலையத்தை தேர்வு செய்யுங்கள். பேமெண்ட் செய்தவுடன் SMS மற்றும் இமெயில் மூலமாக உடனடியாக உங்கள் இ-டிக்கெட்டை பெறுவீர்கள்.