
பிரதமர் மோடி அவர்கள் தலைமையில், இரயில்வே துறை அபார வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாக, அதிவேகமாகச் செல்லக்கூடிய 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை ஐந்து ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக தென்னிந்தியாவில், சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக, மைசூருக்கு ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. அந்த இரயில் 362 கி.மீ.தூரமுள்ள பெங்களூரை, 4.25 மணிநேரத்திலும், 500 கி.மீ. தூரமுள்ள மைசூருவை, 6.30 மணி நேரத்திலும் அடைகிறது. இருக்கை வசதி மற்றும் இதர வசதிகள் உள்ள இந்த ரயிலில், மைசூருக்கு, பயணக்கட்டணம் மற்றும் உணவு, சிற்றுண்டிக் கட்டணத்துடன் சேர்ந்து மைசூருக்கு ரூ1200 ஆகும்.
இதுவரை குறைந்த தூரங்களில் இயக்கப்பட்டு வருவதால், அமர்ந்து செல்லக் கூடிய இருக்கைகளோடு, ரயில் பெட்டிகள் தயாரிக்கப் பட்டு வந்தன. தற்போது நீண்ட தூரம் செல்லக் கூடியப், படுக்கை வசதிகளுடன், ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நவீன வசதிகளுடன் கூடிய, சுமார் 200 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் தூங்கும் வசதி கொண்ட 16 பெட்டிகளிருக்கும். இதில் 11 மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டிகள், 4 இரண்டு அடுக்கு ஏ.ஸி.பெட்டிகள் மற்றும் ஒரு முதல் வகுப்பு ஏ.ஸி.பெட்டியும் இருக்கும். மூன்று அடுக்கு ஏ.ஸி.பெட்டியில் 61 படுக்கைகளும், இரண்டு அடுக்கு ஏ.ஸி.பெட்டியில் 48 படுக்கைகளும், முதல் வகுப்பு ஏ.ஸி.பெட்டியில் 24 படுக்கைகளும் இருக்கும். மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர் பயணிப்பதற்கான வசதியும் இருக்கும். ஒரு இயிலில் 887 பேர் பயணிக்கலாம். புதிய வந்தே பாரத் ரயில்கள், சென்னை ஐ.சி.எஃப் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள லத்தூர், மராத்வாடா தொழிற்சாலைகளில் தயாரிக்க உள்ளது.
இந்தியா முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் 'வந்தே பாரத்' ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. உச்சக்கட்டமாக 'புல்லட் டிரெயின்' இயக்க திட்டமிடப்பட்டு, மும்பை அகமதாபாத் இடையே பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன.
இனிவரும் காலத்தில், காலையில் சென்னையிலிருந்து, புதுதில்லியிலுள்ள உறவினருக்கு ஃபோன் செய்து, "மதனி மத்யானம் லஞ்சுக்கு, அங்கு வந்து விடுகிறேன்!" என்று சொல்லுமளவிற்கு, 'ஜப்பானுக்கு' இணையாக 'புல்லட் டிரெயின்கள்' விடும் காலம் வெகு தூரத்திலில்லை.